
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த S.N.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான வெங்கட ரமணன். இவர் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு சொந்தமாக அதே ஊரில் 5 ஏக்கர் நிலம் உள்ளது, வெங்கட ரமணன் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி அதிகாலை தன்னுடைய விவசாய நிலத்தில் இருந்த வெங்கடரமணனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளார். இதனை பாத அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வெங்கட ரமணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், மேலும் பொன்னை இன்ஸ்பெக்டர், காட்பாடி இன்ஸ்பெக்டர், பிரம்மபுரம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் வேங்கடரமணன் பெரியப்பா மகனான திருப்பதியைச் சேர்ந்த 52 வயதான சின்னப்பரெட்டி மற்றும் பொன்னை அடுத்த P.N.பாளையத்தை சேர்ந்த 48 வயதான சாந்தகுமார் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது இருவரும் அளித்தவாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில் கொலை செய்யப்பட்ட வெங்கட ரமணன் மற்றும் சின்னப்பா ரெட்டிக்கும் S.N. பாளையத்தில் உள்ள 15 சென்ட் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. வெங்கட்ராமனுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் இவரை கொலை செய்தால் அனைத்து சொத்துக்களையும் பங்காளி என்ற முறையில் அபகரிக்கலாம் என நினைத்து அருகில் உள்ள P.N.பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலிப்படை தலைவனான சாந்தகுமாரை அணுகிய சின்னப்ப ரெட்டி வெங்கடரமணனை “தீர்த்துக் கட்டினால் நீ கேட்கும் பணம் கொடுக்கிறேன்” என கூறியதாகவும் மேலும் முன் பணமாக 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அதன்படி சாந்தகுமார் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கூலிப்படையை சேர்ந்தவர்களை அழைத்து வந்து வெங்கட்ரமணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்
இந்நிலையில் கடந்த மாதம் வெங்கட்ராமனனை கொலை செய்ய முயன்ற போது கூலிப்படையை சேர்ந்த ஒருவனை மடக்கி பிடித்த ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர். அப்போது P.N. பாளையத்தை சேர்ந்த சாந்தகுமார் கூலிப்படை நபரை தப்பிக்க வைத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகின்றது இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை வெங்கடரமணன் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர் .
தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த இருவரை பிடிக்க இரண்டு தனிப்படை போலீசார் சாந்தகுமார் மற்றும் சின்னப்பா ரெட்டி ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் சென்று குண்டக்கல் பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் புஷ்பா என்கின்ற பிரம்மையா (43), ராமையா என்கிற ராமகிருஷ்ணன் (44) ஆகியோரை சுற்றி வளைத்தனர். அப்போது கூலிப்படை சேர்ந்த இரண்டு பேரும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றனர் சுதாரித்துக் கொண்ட போலீசார் இரண்டு பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.