கடலூர் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவசங்கரன் - ஞானசௌந்தரி என்ற தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்து அவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயது ஆகிறது.
அதில் ஒரு குழந்தை இன்று தண்ணீர் பக்கெட் இருக்கும் பகுதியில் விளையாடி உள்ளது. திடீரென தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் குழந்தை பக்கெட் உள்ளேயே மூழ்கி உயிரிழந்து உள்ளது.
நீண்ட நேரம் குழந்தையை காணாமல் தேடிய பெற்றோர்கள் பக்கெட் உள்ளே குழந்தை கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக குழந்தையின் உடல் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்பொழுது அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.