“காதலன் வீட்டில் தர்ணா செய்த காதலி” - கல்லூரியில் ஏற்பட்ட காதலால் 10 மாத குழந்தையுடன் தவிக்கும் பெண்.. ஜாதியை காட்டி சேர்ந்து வாழ மறுப்பு!

மாற்று சமூகத்தினர் என்ற காரணத்தால் எனது அம்மா உன்னுடன் வாழக்கூடாது என சொல்லுகிறார்
“காதலன் வீட்டில் தர்ணா செய்த காதலி” - கல்லூரியில் ஏற்பட்ட காதலால் 10 மாத குழந்தையுடன் தவிக்கும் பெண்.. ஜாதியை காட்டி சேர்ந்து வாழ மறுப்பு!
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் 23 வயதான காளிமுத்து இவரும் ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகளான 20 வயதுடைய சூரிய பிரியா ஆகிய இருவரும் வாணியம்பாடி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியில் பயின்று வந்தனர். இருவரும் கல்லூரிக்கு வெளியில் பார்த்து பேசி பழகி வந்த நிலையில் இந்த பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் பிரியா கர்ப்பமடைந்துள்ளார். அப்போது அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி காளியப்பன் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். காளியப்பன் சென்று சில நாட்கள் ஆகியும் வீடு திரும்பாமல் பிரியாவிற்கு போன் செய்யாமல் இருந்துள்ளார். எனவே காளிமுத்துவிற்கு போன் செய்து பிரியா பேசியபோது காளிமுத்து “50 பவுன் நகை கொண்டு வந்தால்தான் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் மேலும் மாற்று சமூகத்தினர் என்ற காரணத்தால் எனது அம்மா உன்னுடன் வாழக்கூடாது என சொல்லுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Admin

இதனால் பிரியா தனது தாய் வீட்டிற்கு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக காளியப்பன் தனது காதல் மனைவியான சூரிய பிரியாவிடம் கூறியதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த சூரிய பிரியா காதலன் வீட்டின் முன்பு காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறி 10 மாத குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அறிந்த காளியப்பனின் தந்தை பெண் வீட்டாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே பெண் வீட்டாருக்கும் காளிமுத்துவின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்டு பத்து மாதத்தில் குழந்தையை விட்டு சென்ற காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com