தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிக்காடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி நடைபெற்று வருகிறது. இங்கு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் நேற்று 3.50 மணியளவில் அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பாஸ்கர் என்ற ஆசிரியர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த நிலையில் அந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன் இது பற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் இன்று மாலை 3 .30 மணி அளவில் காவல் நிலையத்திற்கு போன் மூலம் மனைவிக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்துவிட்டு பள்ளி முன்பு மற்ற பள்ளி மாணவ மாணவிகளுடன் அவரவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஒரு மாணவியை மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் பயிலும் 15 மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புகைரளித மாணவியின் தந்தை ஆசிரியரை “ உன் மூஞ்சியை ஒடச்சிடுவேன்” என மிரட்டியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை பெற்றோர்கள் முற்றுகையிட்டு அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் பெற்றோர்களை சமாதானப்படுத்திய காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ்கர் என்ற ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வாசுகி “மாத பிதா குரு என்பார்கள் அப்படிப்பட்ட குருவான ஆசிரியர் இந்த தவறை செய்யலாமா?
53 வயதுடைய ஒரு நபர் செய்யும் செயலா இது, பிஞ்சு குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்த இவரை வேலையே விட்டு உடனடியாக நீக்க வேண்டும். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளின் தாயாக இந்த கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 53 வயதுடைய ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.