"ஆடைகள் களையப்பட்டு சுயநினைவின்றி கிடந்த பெண்!" திருமணத்திற்கு வந்த இடத்தில் நடந்த சம்பவம்.. மணமகன்தான் காரணமா?

மறுநாள் காலை அறிமுகமில்லாத படுக்கையறை ஒன்றில் ஆடைகள் களையப்பட்டு கிடந்ததாகவும் அப்பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
Wedding guest sexual assault
Wedding guest sexual assault
Published on
Updated on
1 min read

பென்சில்வேனியாவில் தனது திருமண விழாவிற்கு வருகை தந்த விருந்தினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த மணமகன். இந்த வழக்கு தொடர்பாக 38 வயதான ஜக்காரே ப்ரௌட்டியின் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளாரா? அல்லது அவர் சார்பாகப் பேச ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளாரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் 17 அன்று, போனௌவில் பரோ காவல் அதிகாரிகள் கெட்டிஸ்பர்க் மருத்துவமனைக்குச் சென்று, பாலியல் வன்கொடுமைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த பெண்ணைச் சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளார். குற்றப்பத்திரத்தின்படி, அப்பெண் முந்தைய நாள் மாலையில் ப்ரௌட்டியின் திருமணத்தில் கலந்துகொண்டதாகவும், அப்போது நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கெட்டிஸ்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்தின் இரவன்று மற்ற விருந்தினர்கள் உறங்கச் சென்ற பிறகு, தான் ப்ரௌட்டியுடன் தனியாக இருந்ததாகவும், இருவரும் சோபாவில் அமர்ந்திருந்தபோது, ​​அவர் தனது அனுமதியின்றி தன்னை முத்தமிட்டதாகவும் அந்த பெண் குற்றம் போலீசாரிடம் குற்றசாட்டியுள்ளார். அதனை தவிர்த்து விட்டு அந்த பெண் மற்றொரு அறைக்குள் சென்றபோது ப்ரௌட்டி அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும், அங்கும் அவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் தான் சுயநினைவை இழந்ததாகவும், மறுநாள் காலை அறிமுகமில்லாத படுக்கையறை ஒன்றில் ஆடைகள் களையப்பட்டு கிடந்ததாகவும் அப்பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் காவல்துறையினர் இதுகுறித்து பிரௌட்டியிடம் தொடர்பு கொண்டபோது அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், புலனாய்வாளர்கள் ப்ரௌட்டியிடமிருந்து டிஎன்ஏ மாதிரியைப் பெற்று, அதைச் சோதனைக்குச் சமர்ப்பித்துள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் பாலியல் வன்கொடுமைப் பரிசோதனையின்போது சேகரிக்கப்பட்ட டிஎன்ஏவுடன் அவரது மாதிரி பொருந்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜூலை 16, அன்று நீதிமன்றத்தில் ஆஜரான ப்ரௌட்டி, 50,000 டாலர் பிணையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com