

புது டெல்லியில் தன் கள்ளக்காதலனின் உதவியுடன் கணவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மனைவி. இந்த கொலை வழக்கில் துரோகம், கசப்பான திருமண வாழ்க்கை மற்றும் கணவனின் கஞ்சத்தனமான பழக்கத்தால் இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, தெற்கு டெல்லியின் ரதியா மார்க் சந்துகளில், கொடூரமான கொள்ளை சம்பவம் ஒன்று நடந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டினுள், 55 வயதான சிறு கட்டுமானத் தொழிலாளியான முன்னா லால் என்பவர், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பீரோக்கள் திறக்கப்பட்டிருந்தன, துணிகள் தரையெங்கும் சிதறிக் கிடைத்துள்ளன.
அவ்விடத்திற்கு வந்த போலீசார் லாலை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து அவரது 45 வயதான மனைவி மஞ்சுவிடம் கேட்டபோது, காலையில் அவரது உடலைக் கண்டதாகவும், அத்துமீறி நுழைந்தவர்கள் மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால், குற்ற நிகழ்விடம் அவர் கூறியதற்கு கொஞ்சம் கூட ஒத்துப்போகாத வண்ணம் இருந்துள்ளது.
தடயவியல் பரிசோதனையில், லாலுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு, மழுங்கிய பொருளால் தலையிலும் முகத்திலும் பலமுறை தாக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதைவிட கொடூரமாக, அவரது பிறப்புறுப்புகளில் மின்சாரம் தாக்கியிருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். வீட்டினுள் காணப்பட்ட குழப்பமான ஒரு சூழ்நிலை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது போல் தோன்றியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தரையின் சில பகுதிகளில் மங்கலான கோடுகள் காணப்பட்டுள்ளன. அந்த கோடு பார்ப்பதற்கு யாரோ ஒருவர் அவசரமாக இரத்தக் கோடுகளைத் தேய்த்து அழிக்க முயற்சித்தது போன்றும், தடயங்களைத் அழிக்க முயன்றதாக தெரிந்துள்ளன. இதனையடுத்து, அருகிலுள்ள சந்துகளின் சிசிடிவி காட்சிகள் மற்றொரு ஆதாரத்தை அளித்துள்ளன. அந்த சிசிடிவி காட்சியில் அதிகாலை சுமார் 1.45 மணியளவில் முகமூடி அணிந்த ஒருவர் அந்த வளாகத்திற்குள் நுழைவதையும், சுமார் 3.15 மணியளவில் வெளியேறுவதையும் காவல்துறை பார்த்துள்ளனர். அதே நேரத்தில், வீட்டிற்கு வெளியே ஒரு பெண்ணுக்கும் அவரது கூட்டாளிக்கும் இடையே நடந்த சந்தேகத்திற்கிடமான, ஒருங்கிணைந்த நடமாட்டங்களையும் அந்தக் காணொளிப் பதிவு காட்டியுள்ளது.
போலீசாரின் சிறப்புக்குழு ஒன்று மஞ்சுவிடம் விசாரணை நடத்தியபோது, அங்குதான் ஒரு ட்விஸ்ட் கிடைத்தது. காவல்துறையின் தகவல்படி, மஞ்சு 20 வயது இளைஞன் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அவர் பெயர் சாமன். சாமனுடன் சேர்ந்து லாலைக் கொலை செய்ய சதியும் செய்துள்ளார். தன் கணவரைக் கொலை செய்வதற்காக சாமனுக்கு 5 லட்சம் ரூபாயும், நீண்டகால நிதியுதவியும் செய்வதாக மஞ்சு உறுதியளித்ததாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கொலைக்குப் பிறகு தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும் அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் புறம்பான உறவு, சிக்கலான திருமண வாழ்க்கை மற்றும் லால் தாராளமாகப் பணம் கொடுக்க மறுத்தது ஆகியவைதான் இந்த குற்றம் நடக்க கரணம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையின் தகவல்படி, அந்தத் திட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு செயல்படுத்தப்பட்டது. சாமன் வழங்கிய தூக்க மாத்திரைகளை மஞ்சு தனது கணவரின் இரவு உணவில் கலந்ததாகக் கூறப்படுகிறது. லால் மயக்கமடைந்தவுடன், இருவரும் சேர்ந்து அவரது அந்தரங்க உறுப்புகளில் மின் அதிர்ச்சி கொடுப்பதற்காக மின்சாரக் கம்பிகளைப் பொருத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அவர்கள் அவரை ஒரு கனமான மரக் குச்சியால் பலமுறை கடுமையாகத் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, அவர்கள் அவரை ஒரு கனமான மரத்தாலான பொருள் ஒன்றால் பலமுறை கடுமையாகத் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. கொலைக்குப் பிறகு மஞ்சு, சமனுக்கு 20,000 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அந்த இருவரும், கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையின் போது லாலைக் கொன்றுவிட்டனர் என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில், வீட்டில் கொள்ளை நடந்ததாக கூறியுள்ளார் மஞ்சு.
கொலையை விசாரிக்க, இணை ஆணையர் விஜய் குமார் மற்றும் துணை ஆணையர் அனந்த் மிட்டல் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுக்க உதவியதாகக் கூறப்படும் கிஷன் என்ற மூன்றாவது கூட்டாளியுடன், மஞ்சு மற்றும் சாமன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 15,000 ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "தெற்கு மாவட்ட போலீசார் இந்த வழக்கில் தீர்வு கண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மஞ்சு, சாமன் மற்றும் கிஷன் என்ற மூன்றாவது நபரை கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்