“கஞ்சா போதையில் காவல் நிலையம் வந்த காவலர்” - சக காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி ரகளை.. பல முறை போதையில் பணியில் ஈடுபட்டதாக குற்றசாட்டு!

பொதுமக்களிடமும் மிகவும் ஆக்‌ரோஷமாகவும், கண்ணியமற்ற முறையிலும் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
“கஞ்சா போதையில் காவல் நிலையம் வந்த காவலர்” - சக காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி ரகளை.. பல முறை போதையில் பணியில் ஈடுபட்டதாக குற்றசாட்டு!
Published on
Updated on
1 min read

இன்றைய சூழலில் இளைஞர்களிடையே கஞ்சா மற்றும் மது போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பது, கொலை மற்றும் கொள்ளை சம்பவதில் ஈடுபடுவது போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இது போன்ற கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான இளைஞர்களை கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டிய காவல் துறையிலேயே காவல் அதிகாரி ஒருவர் கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் சக காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாவட்டம் ராமாபுரம் காவல் நிலையத்தில் காவல் நிலைய காவலராக இருந்து வருபவர் பிரபு. இவர் சமீப நாட்களாக கஞ்சா மற்றும் மது போதையில் காவல் நிலையத்திற்கு பணிக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை காவலர் பிரபு, கஞ்சா மற்றும் மது போதையில் காவல் நிலையம் வந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள் அவரை கண்டித்த போது அதிகாரிகளை தரக்குறைவாக பிரபு பேசியுள்ளார்.

சமீப நாட்களாக பிரபு இதே போல கஞ்சா மற்றும் மது போதையில் காவல் நிலையம் வந்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்களை தரக்குறைவாக பேசுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் என கூறப்படுகிறது. போதையில் பணியில் இருக்கும் போது பொதுமக்களிடமும் மிகவும் ஆக்‌ரோஷமாகவும், கண்ணியமற்ற முறையிலும் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று பணிக்கு வந்த காவலர் பிரபு போதையில் சக காவலரையும், காவல் ஆய்வாளரையும் தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com