கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் முகேஷ். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அந்த பெண் ‘எனக்கு என் கணவரை பிடிக்கவில்லை.. விவாகரத்து செய்ய போகிறேன்” என கூறியுள்ளார். எனவே இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த இலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பெண் முகேஷுடன் சேர்ந்து வெளியூருக்கு சென்று அறை எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர். எனவே நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அந்த பெண்ணின் கணவன் அவரை தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். இதன் காரணமாக கோபமடைந்த முகேஷ் தொடர்ந்து அந்த பெண்ணை தன்னுடன் வருமாறு தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் மனைவி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரச்சனைக்கு காரணமான முகேஷ்யை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் விசாரணை மேற்கொண்டு இனிமேல் பிரச்சனை செய்யக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் முகேஷிடம் காவல் உதவி உதவியாளர் ஜான்சன் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிய வரவே சிறிது நேரத்திலேயே தொலைபேசியில் முகேசை தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன் ‘SI ஜான்சன் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கச் சொன்னார் நீங்க எங்கே இருக்கிறீர்கள்’ எனக் கேட்டு பேசியுள்ளார்.
அப்போது முகேஷ் ‘நான் வெளியில் இருக்கிறேன் காலையில் கோவை சென்று விடுவேன் இப்போது வர முடியாது… காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும் பணம் எனக்கு வேண்டாம் இந்த பிரச்சனையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும்’ என கூறியுள்ளார். மேலும் திருமணம் ஆகவில்லை எனக் கூறி தான் அந்தப் பெண் என்னிடம் பழகினார் எனவும் இனிமேல் நான் எந்த பிரச்சனைக்கு வரமாட்டேன் என முகேஷ் புலம்பும் ஆடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.