

சேலம் மாவட்டம், இடங்கணசாலை அடுத்துள்ள கே. கே. நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவரது மகன் 25 வயதுடைய கெளதம். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கும் இவரது உறவுக்கார சகோதரரான சிவமூர்த்திக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கெளதம் அவரது அண்ணனை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு கொலை செய்த கௌதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி நிபந்தனை ஜாமீனில் வந்த கெளதம். தினந்தோறும் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் காலை மாலை கையெழுத்திட வேண்டும் என உத்ராவோடப்பட்ட நிலையில் தினமும் காவல் நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கையெழுத்திட்டு மீண்டும் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதே போல கடந்த (நவ 06) ஆம் தேதி மாலை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற கெளதம் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கௌதமின் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே போலீசார் கௌதமை தேடி வந்த நிலையில் அன்றிரவு இரும்பாலை அருகே சிட்டனூர் பகுதியை ஒட்டியுள்ள இரும்பாலைக்கு சொந்தமான நிலத்தில் கெளதம் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தலையில்லாமல் கிடந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் அவர் தலையை தேடிவந்த நிலையில் உடல் இருந்த பகுதிக்கு சற்று தொலைவில் தலை கல்லை போட்டு நசுக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. பின்னர் தலை மற்றும் உடல் ஆகிய இரண்டையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கௌதமின் நண்பர்களான 22 வயதான தனுஷ் மற்றும் 23 வயதான மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த திருவிழாவின் போது கெளதம் குடித்துவிட்டு நண்பர்களான தனுஷ் மற்றும் மூர்த்தியை தகாத வார்த்தைகளை பேசி அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த இருவரும் ஜாமீனில் வந்த கௌதமை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.