
சேலம் மாவட்டம், பள்ளபட்டியில் உள்ள சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியை சிவகுமார் என்பவருக்கும் திருமணமாகி 12 வருடங்களாகும் நிலையில் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும் 8 வயது குழந்தையுடன் ஈரோட்டில் வசித்து வந்த சாந்தியின் சகோதரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் சாந்தி தனது சகோதரியை தனது வீட்டிற்கு அருகில் குடியமர்த்தி பாதுகாத்து வந்துள்ளார். 8 வயது சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் பள்ளிக்கு வீட்டிலிருந்து சிறுமி தனியாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல கடந்த (செப் 01) ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய சிறுமி தனது அண்ணன் மற்றும் மற்ற நண்பர்களுடன் தெருவில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த அதே தெருவில் வசிக்கும் 44 வயதன தமிழரசன் என்பவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்து சிறுமிக்கு 20 ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியை கையை பிடித்து புதியதாக கட்டிக்கொண்டிருந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த கட்டிடத்தில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியின் ஆடைகள் கழட்டி சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். அப்போது சிறுமி சத்தமிட்டு அழுதுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அவரது அண்ணன் தங்கை பார்த்துட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வீட்டிற்கு சென்று “பாப்பாவை டிரஸ் எல்லாம் கழட்டி தமிழ் அண்ணா எதோ பண்றாங்க” என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். எனவே சிறுவன் சொன்ன இடத்திற்கு பெற்றோர் சென்ற நிலையில் இவர்களை பார்த்து தமிழரசன் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்ட அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழரசன் குறித்து புகாரளித்துள்ளனர். தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழரசனை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்