

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீஷ் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிதனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டேன்டில் ஆட்டோவை நிறுத்தி அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சவாரிக்கு செல்வது அவரது தினசரி வழக்கம்.
இதற்கிடையில் மகாலட்சுமி நகர், ஜே.சி.கே நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாத வாடகைக்கு தனது ஆட்டோவில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை தினமும் காலை பள்ளிக்கு கொண்டு விடுவதும் மாலை பள்ளி முடிந்தவுடன் அவர்களை மீண்டும் வீட்டிற்கு கொண்டு விடும் பணியும் செய்து வந்துள்ளார். இந்த ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை அவர்கள் 1-ம் வகுப்பு பயில்வது முதல் தற்போது வரை இவர்தான் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு விடுகிறார். பல ஆண்டுகளாக இவரை பெற்றோர்களும், குழந்தைகளும் நன்கு அறிவர்.
ஜெகன் மீது ஒவ்வொரு பெற்றோருக்கும் முழு நம்பிக்கை இருந்து வந்துள்ளது. இதிலும் குறிப்பாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 8-ம் வகுப்பு பயிலக்கூடிய ஒரு மாணவியை ஜெகன் ஆட்டோவில் பள்ளிக்கு ஏற்றிச்சென்று வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜெகதீஷை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு பிறகு அவரை செங்கல்பட்டு POCSO நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை பருவத்தில் இருந்து மாணவிகளை தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நம்பிக்கைக்குரிய ஆட்டோ டிரைவரே மாணவியிடம் சில்மிஷம் செய்த சம்பவம் ஆட்டோவில் பயணித்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.