20 முதல் 30 முறை.. மாணவனுடன் ஆசிரியர் உடலுறவா? 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பதற வைக்கும் உண்மைகள்!

தனது காதலியாக நினைத்ததாகவும், அவர் மீது காதல் கொண்டிருந்ததாகவும் அந்த முன்னாள் மாணவர் தெரிவித்துள்ளார்
20 முதல் 30 முறை.. மாணவனுடன் ஆசிரியர் உடலுறவா? 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பதற வைக்கும் உண்மைகள்!
Published on
Updated on
2 min read

லண்டனில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இரண்டு பள்ளி மாணவர்களிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் வேதியியல் ஆசிரியர் ஒருவர், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது. 65 வயதான சாலி-ஆன் போவன், வடக்கு லண்டனில் உள்ள ஃபிஞ்ச்லே பகுதியில் செயல்படும் ஒரு ஆண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது இந்த சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது போவனுக்கு 20 முதல் 30 வயது இருக்கும் என்றும், அவரிடம் படித்த மாணவர்களுக்கு சுமார் 14 முதல் 15 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி முன்னாள் ஆசிரியர் போவன் மீது சுமத்தப்பட்டிருந்த ஏழு  பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நடுவர் குழு தீர்ப்பளித்தது. சுமார் 6 மணி நேரம் 29 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய பிறகு பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “தான் மாணவராக இருந்தபோது பல மாதங்களுக்கு போவனுடன் பாலியல் உறவில் இருந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். 20 முதல் 30 முறை பாலியல் உறவு வைத்து கொண்டதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், போவனை தனது காதலியாக நினைத்ததாகவும், அவர் மீது காதல் கொண்டிருந்ததாகவும் அந்த முன்னாள் மாணவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான உறவை யாரிடமும் தெரிவிக்க கூடாது எனவும் போவன் தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்த விவகாரம் குறித்து தான் யாரிடமும் பேசவில்லை என்றும், போவன் தன்னை அமைதியாக இருக்கச் செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த அனுபவம் தனது கல்வியையே பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த சம்பவம் புகார்தாரரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வாதிட்டார். குறிப்பாக, அவர் தாமே பெற்றோராக ஆன பிறகுதான் தனக்கு நேர்ந்த சம்பவத்தின் தீவிரத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு முன்னாள் மாணவரும் புகார் இரண்டாவது புகார்தாரரும் போவனுக்கு எதிராக சாட்சியமளித்துள்ளார். மற்ற மாணவர்களின் தூண்டுதலின் பேரில், தானும் போவனும் ஒரு கஃபேயில் முத்தமிட்டதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் மாணவர் டோபியாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் ஆசிரியர் போவன் வகுப்பறையில் மாணவர்களிடம் பாலியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசியதாக நீதிமன்றத்தில் குற்றங்களை தெரியப்படுத்தினர். காமசூத்திரம் எனக் கூறப்படும் பாலியல் கையேடு மற்றும் பல்வேறு பாலியல் நிலைகள் குறித்து வகுப்பறையில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போவன் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். இந்த  குற்றசாட்டுகளை மறுத்த ஆசிரியை போவன், “மாணவர்களுடன் தான் நட்பாக மட்டுமே பழகியதாகவும்.. முதல் புகார்தாரருடன் எந்த உறவும் இல்லை என்று மறுத்த அவர், இரண்டாவது புகார்தாரரை தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், விசாரணையின் முடிவில் ஏழு குற்றச்சாட்டுகளில் போவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கு, நவம்பர் 20ஆம் தேதி தண்டனை வழங்கப்பட உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com