போர்வையை சுற்றி இளைஞர்களை தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சி சம்பவம்! தீவிர விசாரணையில் போலீசார்

இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கருகிய நிலையில் இரு சடலங்கள்...
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை செல்லும் சாலை
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை செல்லும் சாலை
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே சாலையோரத்தில் அரை கிலோ மீட்டர் இடைவெளியிலேயே 2  வாலிபர்களின் உடல்களை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர் என்ற பகுதியில் இன்று காலை சாலையோரத்தில் வாலிபர் ஒருவரை, அவரது உடலில் பெட்ஷீட் உள்ளிட்டவற்றை சுற்றி எடுத்துக் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தென்னை ஓலைகளை வைத்து எரித்து மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சத்துவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த இளைஞர் எரிந்த சடலத்திற்கு அருகில் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியில் மற்றொரு இளைஞரை இதே பாணியில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கருகிய நிலையில் இரு சடலங்கள் கிடப்பதாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். மேலும், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அந்த இரு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இவர்களை ஒரே பாணியில் கொலை செய்துள்ளனர்?, வேறு பகுதியில் கொலை செய்து விட்டு அவர்களை கொண்டு வந்து இங்கு தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com