
சிவகங்கை மாவட்டம், வாரச்சந்தை காவலர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தவர் சதீஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை நகர் வர்த்தக பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தனது வாகனம் பழுது பார்க்கும் கடை அருகிலேயே அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி . கடையை முடித்துவிட்டு இரவில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த சதீஷ் நேற்று இரவும் தனது அறையில் வழக்கம் போல் நண்பருடன் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது அறையின் அருகிலேயே டிரம் செட் தொழில் செய்து வரும் சில நபர்களும் அறை எடுத்து தங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இரவு மது போதையில் இரு தரப்பினர் இடையே வாய் தகராறு நடந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பிறகு அது கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில் சதீஷை அந்த கும்பல் தாக்கி தள்ளி விட்டதில் சதீஷ் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து சதிஷ் உயிரிழந்ததை அறிந்த உடன் இருந்த நபர் காவல் துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்த்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சதீஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணை நடத்தி எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
பாஜக பிரமுகரை அடித்து கொலை செய்த இந்த வழக்கில் திருப்பத்தூரை அடுத்துள்ள ஏரியூர் வடவன் பட்டியைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்ற 19 வயதுடைய செல்வா திருப்பத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்த 19 வயதுடைய ஆனந்த் மேலூரை அடுத்த பட்டூரைச் சேர்ந்த 25 வயதுடைய அன்பரசன் ,அதே ஊரைச் சேர்ந்த 20 வயதுடைய கண்ணன் அவரது தம்பி பூபதி19 வயதுடைய விஸ்வா, 20 வயதுடைய செல்வா என்ற ஐந்து பேரை கைது செய்தனர் மேலும் இரண்டு நபரை தேடி வருகிறார்கள். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.