
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்துள்ள கணபதி அக்ரஹாரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 24 வயதுடைய மேகநாதன். இவர் வேறு இடத்தில் இருந்து சமீபத்தில் இப்பகுதிக்கு குடி பெயர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தை வைத்து வீலிங் செய்வது ஸ்கிட் அடிப்பது என ஏரியாவில் கெத்து காட்டி வந்துள்ளார். மேலும் அப்பகுதி பெண்களின் கவனம் ஏற்கும் வகையில் சீன் போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அதே பபிகுதியை சேர்ந்த 20 வயதுடைய சஞ்சய் மேகநாதனை கண்டித்துள்ளார்.
எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது சஞ்சய் மற்றும் மேகநாதன் மீது ஏற்கனவே போலீசில் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த பிரச்சனை “யார் ஏரியாவில் கெத்து” என்ற பிரச்சனையாக மாறி இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே சஞ்சய் மேகநாதனை அடித்து தான் ஏரியாவில் கெத்து என்பதை நிரூபிக்க நினைத்துள்ளார். இதற்கு உறுதுணையாக சஞ்சயின் நண்பர்களும் அவருக்கு உதவி செய்துள்ளனர்.
இந்த நிலையில் (ஆக 27) தேதி அன்று மேகநாதன் தனது மோட்டார் சைக்கிளில் திருவையாறு - கும்பகோணம் நெடுஞ்சாலை இடையே கணபதி அக்ரஹாரம் விநாயகர் கோவில் அருகில் வந்து கொண்டிருந்த பொழுது முன்விரோதத்தை மனதில் வைத்து சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான கணபதி அக்ரஹாரம், இளந்தோப்புத் தெரு 20 வயதுடைய அஜய் மற்றும் கணபதி அக்ரஹாரம் தெய்வலோக படுகையை சேர்ந்த 22 வயதுடைய முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் தலை மற்றும் முதுகு பகுதிகளில் வெட்டி அடித்து உதைத்து படுகாயத்தை ஏற்படுத்தினர்.
படுகாயம் அடைந்த மேகநாதன் உடனடியாக சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் வெட்டிய அஜய், மற்றும் முத்து ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.