“சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்” - தற்கொலை செய்து கொண்ட காதலி.. வெட்டி கொல்லப்பட்ட காதலன்!

சில கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி மனோஜை விட்டு விலகியுள்ளார்
“சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்” - தற்கொலை செய்து கொண்ட காதலி.. வெட்டி கொல்லப்பட்ட காதலன்!
Published on
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்ல சாமியின் மகன் மனோஜ் பிரபு. இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு இடையமேலுர் பகுதியில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது காரில் இவரை பின் தொடர்ந்த மர்ம நபர் காரினால் வாகனத்தை இடித்து தள்ளி கீழே விழுந்த மனோஜை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை பார்த்த உடனிருந்தவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு முதற்கட்ட விசாரணையில் மனோஜிற்கும் அதே பகுதியை சேர்ந்த அபிமன்யு என்பவருக்கும் முன் பகை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மனோஜ் அபிமன்யுவின் தங்கையான புவனேஸ்வரியை காதலித்து வந்துள்ளார்.

சில கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி மனோஜை விட்டு விலகியுள்ளார். இதனால் புவனேஸ்வரிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாத மனோஜ் புவனேஸ்வரியுடன் இணைத்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து மனமுடைந்த புவனேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அபினவ் மற்றும் மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது.

Admin

இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில், மனோஜ் அபிமன்யுவை கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். அப்போது அபிமன்யுவை காப்பாற்ற சென்ற அவரது தந்தை பாண்டியனின் கையில் மனோஜ் வெட்டியுள்ளார். இதனால் ஒரு கை இழந்த பாண்டியனும் சமீபத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே இந்த கொலையை தங்கை மற்றும் தந்தையை இழந்த அபிமன்யு செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த மனோஜ் கோவில் திருவிழாவிற்கு வந்த நிலையில் அவர் இரவு நேரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முழு விசாரணைக்கு பிறகுதான் மனோஜை யார் கொள்ளை செய்தார் அதற்கான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com