
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்த 54 வயதான அருள் தாஸ். இவருக்கு தனம் என்ற மனைவியும் 27 வயதான தமிழரசு என்ற மகனும் உள்ள நிலையில் தமிழரசுக்கு அதே பகுதியை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தமிழரசன் மனைவி நவநீதம் ஒரு வருடத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவி இறந்த பிறகு தமிழரசு அவரது குழந்தை மற்றும் தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளர். தமிழரசு மற்றும் அருள் தாஸ் வேலைக்கு செல்லும் நிலையில் தனம் குழந்தையை பார்த்து கொண்டு வீட்டில் இருந்துள்ளார்.
நவநீதம் இறந்த பிறகு தமிழரசு மது போதைக்கு அடிமையாகி தொடர்ந்து தினமும் குடித்துவிட்டு சென்று அவரது தந்தை அருள்தாஸ் இடம் அவ்வப்போது சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை மகனுக்கு இடையே இருந்த வாக்குவாதம் குடும்பச் சண்டையை மாறியுள்ளது. மேலும் தமிழரசு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அருள்தாஸ் தமிழரசை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
வழக்கம் போல் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டி கொண்ட நிலையில் ஆத்திரம் அடைந்த தமிழரசு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை அருள்தாஸை பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து அருள்தாஸ் தரையில் சாய்ந்த நிலையில், மது போதையில் தமிழரசுவும் மயக்கம் அடைந்துள்ளார்.
இதனை பார்த்த தமிழரசு தாய் தனம் அழுகுரல் கேட்டு, தனத்தின் வீட்டிற்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் கனகம்மா சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீக்கி என்ற மோப்பநாய் வரவழைத்து அந்த பகுதியில் தூக்கி வீசப்பட்ட கொலை செய்வதற்காக பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.
மேலும் அருள்தாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் பெற்ற தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.