

மதுரை பைபாஸ் சாலை தனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி மற்றும் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகைக்கடையின் உரிமையாளர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார் கொள்ளை போன நகையும் தற்சமயம் கைப்பற்றுள்ள நகையும் ஒன்றுதான என்று பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திறந்து 15 நாட்களே ஆனா பிரபல நகைக்கடையான தனிஷ்க் -ல் 15 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த கொள்ளையில் தனி நபர் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாகவும், வாடிக்கையாளர் போல் தினமும் வந்து நோட்டமிட்டாகவும் தகவல்கள் வெளியானது. நேருநகர், மாடக்குளம், பழங்காநத்தம், நாகமலை புதுக்கோட்டை, ரயில்வே நிலையம் ,டிராபிக் சிக்னல் கேமிராக்கள், டோல்கேட் கேமிராக்கள் பதிவுகளை விடிய விடிய நடத்திய தீவிர ஆய்வில் கொள்ளையனை நேற்று நெருங்கியது காவல்துறை.
சினிமா பாணியில் தனி ஒருவனாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் எந்த தடயங்களும் கிடைக்காத நிலையில் சிசிடிவி-களில் இருந்து நேக்காக தப்பியுள்ளார். கொள்ளை அடிப்பதற்கு முன்பே TRAIL பார்த்ததாகவும் செய்திகள் வெளியானது. கடந்த 5ஆம் தேதி அன்று இதேபோன்று அதிகாலை முகமூடி அணிந்தபடி கொள்ளையடிக்க திட்டமிட்டு நோட்டம் பார்த்து சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் நகைக்கடையில் கொள்ளையடித்தவனை பிடிக்க 3 ஏ.சி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கேரளா, ஐதராபாத் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையன் நகையுடன் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியான நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் அருள்ஜோதி நகரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் நிஷாந்த் என்பவர் வீட்டில் போலீசார் மாலையிலிருந்து சோதனை நடத்தினர். மேலும் அவரின் தாய் மற்றும் தந்தையிடம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. மேலும், யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளது. நிஷாந்த் தனது முகத்தை வெளிக்காட்டமல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நிஷாந்தை பிடித்தால் கொள்ளையில் மேலும் தொடர்புடையோர் பற்றி தெரிய வரும் என்றும் சொல்லபடுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.