அரிசோனா பள்ளி ஒன்றில் பணிபுரியும் 22 வயதான கற்பித்தல் உதவியாளர் ஒருவர், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருடன் பாலியல் தொடர்பு கொண்டதன் விளைவாகக் கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவருடன் ஏற்பட்ட முதல் பாலியல் உறவைத் தொடர்ந்து ஜெசெனியா ரோட்ரிக்ஸ் கர்ப்பமானதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், மார்ச் மாதத்தில் இருவரும் பலமுறை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சந்திப்புகள் குறித்த வதந்திகளைக் கேள்விப்பட்ட மாணவனின் சிற்றன்னை, குழந்தையின் கைபேசியைச் சோதிக்குமாறு வலியுறுத்தியதை அடுத்து, சட்ட அமலாக்கத் துறைக்கு இந்த நிலைமை குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது .15 வயது சிறுவனின் கைபேசியைச் சோதித்தபோது, சிற்றன்னை கணிசமான ஆதாரங்களைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர், தான் கண்டறிந்தவை குறித்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதால், ஓர் அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அந்த மாணவனிடம் விசாரித்தபோது, இடைவேளை நேரங்களில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும்,பின்னர் அந்த மாணவன் அவரின் தொலைபேசி எண்ணைப் பெற்றிருந்ததையும் அச்சிறுவன் உறுதிப்படுத்தினார்.
சட்டப்பூர்வ ஆவணங்களின்படி, ரோட்ரிக்ஸ் என்பவர் இடைவேளை நேரங்களில் குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள ஒரு கற்பித்தல் உதவியாளர் ஆவார். விசாரணையின் போது, அந்த மாணவர் உடலுறவின் போது கருத்தடை முறைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், அதனால் அந்த உதவியாளருக்காக கருக்கலைப்பு மருந்தை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் கர்ப்பப் பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் முடிவு வந்ததன் புகைப்படத்தை அந்த மாணவனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், "கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய" "வன்முறையான உடலுறவு" கொள்வது குறித்து விவாதிக்கும் செய்திகளைத் தாங்கள் கண்டறிந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த இருவரும் மேலும் இருமுறை சந்தித்ததாகவும், மூன்றாவது சந்திப்பு சிறுவனின் இல்லத்திற்கு அருகிலுள்ள பூங்கா இருக்கை ஒன்றில் நடந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கள் சந்திப்புகளை இரகசியமாக வைத்திருக்குமாறு ரோட்ரிக்ஸ் அந்த மாணவருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட மாணவர் ரோட்ரிக்ஸைத் தொடர்புகொண்டு, அவரது பெற்றோர் தங்கள் இரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டனர் என்பதைத் தெரிவிக்குமாறு சட்ட அமலாக்கத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அந்தத் தொலைபேசி உரையாடலின் போது, அவருடன் தனக்கு எந்தப் பாலியல் தொடர்பும் இல்லை என்று மறுத்த அவர், தன்னை ஒரு சதிக்குள் சிக்க வைக்கிறார்களோ? என்ற கவலையையும் வெளிப்படுத்தினார்.
22 வயதான அந்தப் பெண், தான் அவனை 'ஏங்கித் தவிப்பதாக' கூறிய ஸ்னாப்சாட் செய்திகளையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாகத் தெரிவிக்கின்றனர். மற்றொரு உரையாடலில், ரோட்ரிக்ஸ் அந்த இளைஞனுடன் 'மகிழ்ச்சியாக இருந்ததாகவும்', அவர்களின் சந்திப்பை 'மிகவும் விரும்பியதாகவும்' கூறியுள்ளார். இதனையடுத்து வியாழக்கிழமையன்று ரோட்ரிக்ஸ் கைது செய்யப்பட்டார். அப்போது, மாணவனின் வயது தனக்குத் தெரியும் என அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார். மேலும், அந்த மாணவர் மீது தனக்குக் 'காதல் உணர்வுகள்' ஏற்பட்டதாகவும், அவர் வயதுக்கு வந்தவுடன் அவருடன் ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
22 வயதான அந்தப் பெண் உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரா? என்பது தற்போது தெரியவில்லை. பாலியல் சுரண்டலுக்காக ஒரு சிறாரை ஆசை காட்டி அழைத்தது மற்றும் அந்த சிறாருடன் நான்கு முறை பாலியல் உறவு கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார். ரோட்ரிக்ஸின் கைது குறித்து பள்ளிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாகவும் பள்ளியின் பிரதிநிதி ஒருவர் உறுதிப்படுத்தினார். மேலும், மாணவர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.