

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் அரசு உதவி பெறும் பள்ளி நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படிக்காமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவியின் பெற்றோர்களை அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் “சிறுமி படித்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் சித்தர்காடு மறையூர் சாலையைச் சேர்ந்த 54 வயதுடைய சாம்சன் பிரபாகரன் சிறுமியை பள்ளியில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிவந்தது” இதனை தொடர்ந்து ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரியர் மற்ற மாணவிகளிடமும் இது போல பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 ஆம் வகுப்பு படித்த மாணவி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 5 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.