“மாத்திரை வாங்கி தரேன் என் கூட ரூமுக்கு வரீங்களா” - கஞ்சா போதையில் தகராறு செய்த வாலிபர்கள்… பாதுகாப்பு கேட்டு மாணவிகள் போராட்டம்!

கஞ்சா போதை இளைஞர்கள் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்...
“மாத்திரை வாங்கி தரேன் என் கூட ரூமுக்கு வரீங்களா” -  கஞ்சா போதையில் தகராறு செய்த வாலிபர்கள்… பாதுகாப்பு கேட்டு மாணவிகள் போராட்டம்!
Admin
Published on
Updated on
2 min read

நாளுக்கு நாள் இளைஞர்களிடையே கஞ்சா மற்றும் மது பழக்கம் பெருகி வரும் நிலையில் போதையில் அவர்கள் செய்யும் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. அது போல ஒரு குற்றச்செயல் தற்போது திருவள்ளூறில் நடைபெற்றுள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் கனகம்மாசத்திரம் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று மாணவிகள் கணித சிறப்பு தேர்வு எழுதிவிட்டு அருகிலுள்ள ராமஞ்சேரி கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகள் பேசியும் “மாத்திரை வாங்கி தரேன் என் கூட ரூமுக்கு வரீங்களா” என கேட்டு அநாகரிகமாக நடந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள கடையில் இருந்த பொருட்களை எடுத்து மாணவிகளின் மீது வீசி காயப்படுத்த இருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் மாணவிகள் கேள்வி எழுப்பிய போது மாணவிகளை அந்த கஞ்சா போதை இளைஞர்கள் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

Admin

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரை தொடர்ந்து வாலிபர்கள் மற்றும் அவரது பெற்றோர்களை கைது செய்தனர். வாலிபர்களின் இந்த செயலை கண்டித்து கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் பின்புறம் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 13 மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக கனகம்மாசத்திரம் போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

ஆனால் காவல் நிலையத்தில் கஞ்சா போதை இளைஞர்களுக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாகவும், உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்கவில்லை என்று மாணவிகள் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். மேலும் நடந்தவற்றை தெரிவித்து விட்டு அவர்கள் ஆத்திரத்துடன் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர் அப்போது அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் சம்பந்தப்பட்ட கஞ்சா போதை இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com