“பிரபல ஜோதிடருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - தாயை பார்க்க கூடாத நிலையில் பார்த்த சிறுமிகள்… மகள்கள் கண் முன் தந்தைக்கு கத்திக்குத்து!

வீட்டிற்கு வந்த மகேஷ் நாயக்கை கூட கவனிக்காமல் சுஜித்ரா தொடர்ந்து ஜோதிடரிடம்...
“பிரபல ஜோதிடருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - தாயை பார்க்க கூடாத நிலையில் பார்த்த சிறுமிகள்… மகள்கள் கண் முன் தந்தைக்கு கத்திக்குத்து!
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், உத்தர கன்னடா சித்தாபுரா பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய மகேஷ் நாயக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுஜித்ரா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 17 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். மகேஷ் நாயக் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். குடும்பத்தில் அதிக கடன் இருந்ததால் அது குறித்து ஜோதிடம் கேட்க சுஜித்ரா பிரபல ஜோதிடரான காமல்காரிடம் சென்றிருக்கிறார்.

அப்போது அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து நல்லது நடக்க வேண்டும் என்றால் தொடர்ந்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில் சுஜித்ரா பூஜைக்காக தினந்தோறும் ஜோதிடரின் அலுவலகத்திற்கு சென்று வந்திருக்கிறார். அப்போது சுஜித்ராவிற்கும் ஜோதிடர் காமல்காருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த மகேஷ் நாயக்கை கூட கவனிக்காமல் சுஜித்ரா தொடர்ந்து ஜோதிடரிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மகேஷ் நாயக் மனைவியை பின் தொடர்ந்து ஜோதிடரின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு அவரது மனைவியும் ஜோதிடரும் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்து தகராறு செய்திருக்கிறார். பின்னர் மனைவியை பிரிந்து பெங்களூருவிற்கு சென்ற நிலையில் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காமல்கார் மற்றும் சுஜித்ரா இருவரும் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் ஜோதிடர் அடிக்கடி சுஜித்ரா வீட்டிற்கு சென்று அங்கு தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற மாணவிகள் சுஜித்ரா காமல்கார் உடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். தாய் வேறு ஒருவருடன் தவறான தொடர்பில் இருப்பதை நினைத்து மன உளைச்சல் அடைந்த மகள்கள் அவரது தந்தைக்கு போன் செய்து “நீ வந்து எங்களை கூட்டிட்டு போய்டுங்க இங்க இருந்த நாங்க தற்கொலை பண்ணிட்டு செத்துடுவோம் அம்மா பண்றது எங்களுக்கு புடிக்கல” என் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ் நாயக் தான் வரும் வரை தனது சகோதரரான வசந்த் நாயக் வீட்டிற்கு செல்லுமாறு தெரிவித்தார்.

எனவே இருவரும் வசந்த் நாயக் வீட்டிற்கு சென்ற நிலையில் தனது கள்ளக்காதல் குறித்து மகள்களுக்கு தெரிந்து விட்டதையும் அவர்கள் வசந்த் நாயக் வீட்டில் இருப்பதையும் அறிந்த சுஜித்ரா எங்கு தனது தவறான உறவு வெளியில் தெரிந்து விடுமோ என பயந்து ஜோதிடர் மற்றும் அடியாட்களுடன் மகள்களை அழைக்க வசந்த் நாயக் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதற்கிடையில் மகேஷ் நாயக் அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஜோதிடர் மற்றும் அவரது ஆட்கள் மகேஷ் நாயக் மற்றும் வசந்த் நாயக்கை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் மகேஷின் மூத்த மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுஜித்ரா, காமல்கார் உட்பட ஏழு பேரை கைது செய்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஏற்கனவே வசந்த் நாயக் உயிரிழந்த நிலையில் மகேஷ் நாயக் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கணவர் மற்றும் கணவரின் சகோதரரை தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com