“உலக்கையால் அடித்து கொல்லப்பட்ட கணவன்.. 2 மனைவிகளுடன் குடும்பம்” - பென்ஷன் பணத்தால் ஏற்பட்ட தகராறு!

அந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்துள்ளது, அப்போது...
telugana murder
Kothi Venkateshwarlu
Published on
Updated on
1 min read

தெலங்கானாவின் சித்திப்பேட் மாவட்டத்தில், தம்பதியினருக்கு இடையே பென்சன் மற்றும் சொத்து பிரிதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 60 வயது கணவரை மனைவி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் உயிரிழப்பில் முடிந்ததாக செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை தெரிவித்தது.

காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்தவர், ஹுஸ்னாபாத் ஹனுமான் நகரில் வசிக்கும் கோத்தி வெங்கடேஸ்வர்லு என்று தெரியவந்துள்ளது. இவர் மஞ்சேரியலில் உதவி வணிக வரி அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் என்றும் ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வு பெற உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இவரது மனைவி ராஜாமணி அதே பகுதியில் துணை  செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

காவல்துறையின் தகவல்படி, கணவன் மாணவிக்கு திருமணமாகி 35 ஆண்டுகளும், இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வெங்கடேஷ்வர்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, தன் பிள்ளைகளுடன் மஞ்சேரியலில் வசித்து வந்தார். அவரால் முடிந்த போதெல்லாம் முதல் மனைவி ராஜாமணியைச் சந்தித்து வந்துள்ளார். வெங்கடேஷ்வர்லு இந்த மாதம் ஓய்வு பெறவிருந்ததால், அவரது ஓய்வூதியம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக ராஜாமணியுடன் தகராறுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் பல சமரசப் பேச்சு வார்த்தைகள் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, ஹுஸ்னாபாத்தில் அந்த பகுதி பெரியவர்கள் முன்னிலையில் இதேபோன்ற ஒரு சமரசக் கூட்டம் நடைபெற்றது. அந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்துள்ளது. அப்போது, ​​பணப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, ராஜாமணி வெங்கடேஷ்வர்லுவின் தலையில் உலக்கையால் அடித்துள்ளார். இதில் வெங்கடேஷ்வர்லு படுகாயமடைந்து, முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் கரீம்நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தனது ஓய்வூதியப் பலன்களை இரண்டாவது மனைவிக்கு கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக, தன் அண்ணி அவரைக் கொலை செய்துவிட்டதாக வெங்கடேஸ்வர்லுவின் சகோதரர் தேவையா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com