“தஞ்சை பெரிய கோயில் அருகே கிடந்த சடலம்” - யாசகம் பெறுபவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. நாயை அடித்ததால் நடந்த கொலை!

ஆத்திரமடைந்த இராமையா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேல்முருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது...
thanjavur murder
thanjavur murder
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரிய கோவில் அருகே சாலையோரத்தில் ஏராளமான ஆதரவற்றோர் தங்கி யாசகம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கோவில் அருகே யாசகம் பெற்று வந்த இராமையா மற்றும் அவருடன் சேர்ந்து அதே பகுதியில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வந்த வேல்முருகன் ஆகிய இருவரும் நண்பர்களுக்காக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

எனவே இருவரும் ஒரே பகுதியில் அமர்ந்து யாசகம் எடுப்பது அதில் வரும் பணத்தை பிரித்துக்கொள்வது இரவில் ஒன்றாக படுத்து உறங்காவது என இருந்துள்ளனர். இதில் இராமையா தன்னுடன் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இராமையா மற்றும் வேல்முருகன் யாசகம் எடுத்த பணத்தில் உணவு வாங்கி அருந்திவிட்டு ஒன்றாக படுத்து உறங்கியுள்ளனர். அப்போது இராமையா வளர்த்து வந்த நாய், அருகில் படுத்திருந்த வேல்முருகனை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், இராமையாவின் நாயை கல்லால் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த இராமையா, வேல்முருகனிடம் “எதற்காக என் நாயை அடித்தாய்.. அது இங்கு இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை” என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த இராமையா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேல்முருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

Admin

இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் இந்த தகராறு நடைபெற்றது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் விடிந்ததும் அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் வேல்முருகன் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீசார், வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த இராமையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாயை கல்லால் அடித்த பிரச்சனையில் தான் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாயை கல்லால் அடித்ததால் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com