“என் தங்கையை கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்” - கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த சோகம்.. 7 மாதங்கள் காத்திருந்து பழி தீர்த்த அண்ணன்!

நான் நிஜாமாபாத் காவல் நிலையத்தில் சென்று சரணடைய போகிறேன்.. எனக்கு குறைந்த தண்டனை கிடைக்க பொதுமக்கள் தான் உதவ வேண்டும்...
Telangana Nizamabad Vaishnavi Murder
Telangana Nizamabad Vaishnavi Murder
Published on
Updated on
3 min read

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியில் கடந்த (செப் 17) ஆம் தேதி மாலை வாலிபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா ஜக்தியால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய வைஷ்ணவி. இவர் ‘வைஷு அம்மா’ என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பிரசாந்தின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைஷ்ணவியின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் வைஷ்ணவிக்கு திருமணத்திற்கான வயது இல்லை என்பதால் திருமானதாகி தள்ளி போடா நினைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உடனே வைஷ்ணவியை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என ஹரிபிரசாத் மிரட்டவே வேறு வழியின்றி வைஷ்ணவியின் பெற்றோர் இருவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் வைஷ்ணவி வீட்டில் வசித்து வந்த நிலையில் பிரசாந்த் மற்றும் அடிக்கடி அவரது தாய் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். மேலும் ஜோடியாக சேர்ந்து வீடியோக்களை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருக்கின்றனர். அப்போது வைஷ்ணவி தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனை தனது பெற்றோர்கள் கண்டித்ததாகவும் ஒரு பிராங்க் வீடியோ செய்திருக்கிறார்

vaishnavi and harisprashanth
vaishnavi and harisprashanth

இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் ஹரி பிரசாந்தின் குடும்பத்தினர் வைஷ்ணவியிடம் வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஹரி பிரசாந்த்தும் மனைவியை வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வைஷ்ணவி கர்ப்பமடைந்த நிலையில் கணவன் வரதட்சணை பிரச்சனையை மறந்து அவரை அன்புடன் பார்த்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2025 மார்ச் மாதம் 13 தேதி வைஷ்ணவியை பிரசாந்த் அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது வைஷ்ணவி மீது கோபத்தில் இருந்த பிரசாந்தின் தாய் அவர் மீது மிளகாய் பொடி தூவி வீட்டில் இருந்த வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் பிரசாந்தை மனைவியை அழைத்து கொண்டு அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Telangana Nizamabad Vaishnavi Murder
“நான்கு மாத கர்ப்பிணி மனைவியை குத்தி கொன்ற வாலிபர்” - 20 வயது மகளை ரத்தவெள்ளத்தில் பார்த்த பெற்றோர்கள்.. காதல் கணவன் சைக்கோவானது ஏன்?

பின்னர் இருவரும் வழக்கம் போல இருந்த நிலையில் (மார்ச் 17, 2025) ஆம் தேதி அதிகாலை நான்கு மணி அளவில் ஹரிபிரசாந்த் அவரது மனைவிஇடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார். பின்னர் இரண்டு மணி நேரம் அதே அறையில் இருந்துவிட்டு காலை 6 மணியளவில் எதுவும் தெரியாதது போல வெளியில் வந்து பல் துலக்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் வைஷ்ணவி தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் அறைக்கு சென்று பார்த்த போது மகள் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி சென்ற ஹரி பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சில திங்களுக்கு முன்பு பிரசாந் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து நிஜாமாபாத் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த வைஷ்ணவியின் இரண்டாவது அண்ணன் சந்தோஷ் தங்கையை கொன்ற ஹரி பிரசாந்தை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி கடந்த (செப் 17) ஆம் தேதி நிஜாமாபாத் கீரின்கிராஸ் சாலையில் சந்தோஷ் சென்று கொண்டிருந்த போது அங்கு ஹரிபிரசாந்த் இருப்பதை கவனித்து உடனடியாக காரில் வைத்திருந்ததை கத்தியை எடுத்து அவரை குத்தி கொலை செய்திருக்கிறார்.

Telangana Nizamabad Vaishnavi Murder
"சகோதரியின் மரணத்துக்கு பழிவாங்கியதாக கூறப்படும் அண்ணன்..." - ஜாமீனில் வெளியே வந்த கணவருக்கு நேர்ந்த சோகம்!

பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற சந்தோஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் "என் தங்கையை கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்.. எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் நமது வீட்டிற்கு வந்து நம் வீட்டை பெண்ணை கொன்றவனை எப்படி மன்னிக்க முடியும்.. இனிமேல் பெண்கள் மீது கை வைக்க எல்லாரும் பயப்பட வேண்டும்.. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது.. நான் நிஜாமாபாத் காவல் நிலையத்தில் சென்று சரணடைய போகிறேன்.. எனக்கு குறைந்த தண்டனை கிடைக்க பொதுமக்கள் தான் உதவ வேண்டும்” என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து (செப் 19) சொன்னது போல நிஜாமாபாத் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த ஹரி பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பேசியுள்ள கொலையாளி சந்தோஷின் மனைவி “ எங்கள் வைஷ்ணவியை கொன்றவன் உயிரிழந்தது எங்களுக்கு மகிழ்ச்சிதான்.. ஆனால் எனது கணவர் இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை, அவர் சிறையில் இருந்து வெளியே வரும் வரை நான் எப்படி எனது குழந்தைகளை வைத்து கொண்டு வாழ போகிறேன் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார். கர்ப்பிணி தங்கையை கொலை செய்த அவரது கணவரை, அண்ணன் 7 மாதங்கள் காத்திருந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com