
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே, ஆறு வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த பணிகளை ஓரியல் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் சாலை அமைக்கும் பணியில் அதிக வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். எனவே கனகம்மா சத்திரம் அருகில் தேசிய நெடுஞ்சாலை அருகில் 20க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதையை கழிக்க சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த வடமாநில தொழிலாளியான இளைஞர் ஏக்ரமுல் அலி என்பவர் தன்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்த மற்ற தொழிலாளிகளிடம் “டீ குடித்துவிட்டு வருகிறேன்” என சொல்லிவிடு சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் சிறுமியின் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
வாயை பொத்தியதும் சுதாரித்துக் கொண்ட சிறுமி, அவரது கையை கடித்துவிட்டு சத்தம் போட்டுள்ளார். சாலையில் சென்ற பொதுமக்கள் சத்தத்தை கேட்டு தேடியுள்ளனர், ஆனால் சிறுமி புதர் பகுதியில் இருந்ததால் நீண்ட நேரத்திற்கு பிறகு சத்தம் வரும் இடத்தை கண்டறிந்த பொதுமக்கள் புதருக்குள் சென்று வடமாநில இளைஞரிடம் இருந்த சிறுமியை மீட்டுள்ளனர். பொதுமக்களை பார்த்ததும் ஏக்ரமுல் அலி தப்பி செல்ல முயற்சித்து நீண்ட தூரம் ஓடியுள்ளார். இருப்பினும் விடாமல் துரத்தி சென்ற பொதுமக்கள் அவரை பிடித்து கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வடமாநில இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இதே திருவள்ளூர் மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியில் மீண்டும் 17 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அப்பகுதி மக்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.