

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமாபுரம் ஊராட்சியில் வசிப்பவர் கலாவதி. இவரது கணவர் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கலாவதியின் இரண்டாவது மகளான 19 வயதுடைய ஹரிதா திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு எதிரே உள்ள மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ஹரிதாவிற்கு அதே கிராமத்தில் உள்ள கோவிந்தம்மாளின் உறவுக்கார பையனான 25 வயதுடைய திலீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திலீப் ஆந்திர மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் லிப்ட் ஆப்பரேட்டிங் பணி செய்து வருகிறார். திலீப் திருவிழாக்களின் போது கோவிந்தம்மாளின் வீட்டிற்கு வரும்போது அவருக்கு ஹரிதா உடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு காதலாக மாறி இரண்டு வருடமாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கோவிந்தம்மாள் அவரிடம் ஹரிதாவை காதலிக்கவேண்டும் அவர்கள் வசதி குறைந்தவர்கள் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் இரண்டு ஆண்டு காலமாக நெருக்கமாக பழகிய திலீப் ஹரிதாவிடம் “உன்னிடம் பழக முடியாது உன்னை காதலிக்க முடியாது கல்யாணம் செய்து கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஹரிதா அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெள்ளை பேப்பரில் கடிதம் ஒன்று அவரது தாய் கலாவதிக்கு எழுதியுள்ளார். அதில் ‘நீ கஷ்டப்பட்டு என்னை வளர்த்து உள்ளாய் நான் என்ன தவறு செய்தாலும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டு உள்ளாய் எனது அக்கா அனிதா மற்றும் தம்பி கௌதம் ஆகியோர்களை நல்லபடியாக பார்த்துக் கொள் அக்கா அனிதா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள் எனது மனது வலிக்கிறது உங்களை விட்டு பிரிகிறேன்.
எனது மரணத்திற்கு காரணம் திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தம்மா ஆகியோர்களை சும்மா விடாதீர்கள். ஐ மிஸ் யூ மை ஃபேமிலி” என்று எழுதி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹரித்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.