
செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் இரண்டாவது தெருவில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாலையில் ரத்தக்கறையுடன் நேற்று முன் தினம் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயதான மார்டின் என்பதும், இவர் அதே பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மார்ட்டின் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து சரவணன் என்பவர் வீட்டில் தங்கி வேலை செய்ய வந்ததுள்ளார். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், மகாராஜா, சக்திவேல் ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மகாராஜா, மார்டினை கொலை செய்தது அம்பலமானது.
இது குறித்து போலீசார் கூறுகையில் சரவணன் கட்டிடங்களுக்கு தளம் போடும் வேலையை செய்து வருவதாகவும் இவர் தனது வீட்டிலேயே மகாராஜா, மார்ட்டின், சக்திவேல் ஆகியோரை தங்க வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். சரவணனுக்கு அடிக்கடி மார்ட்டின் மது வாங்கி கொடுத்து வந்துள்ளார், சரவணனுக்கு சிறுநீரக கோளாறு இருப்பதால் மது வாங்கி கொடுக்க வேண்டாம் என மார்ட்டினை, மகாராஜா பலமுறை கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மூன்று பேரும் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த நிலையில் ராஜாவிற்கும், மார்டினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மது அருந்திவிட்டு இருவரும் அந்த தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் மார்ட்டின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து அங்கிருந்து மகாராஜா தப்பி சென்றுள்ளார். இரவு போலீசார் மகாராஜாவிடம் விசாரணை நடத்திய போது அவர் குடிபோதையில் இருந்ததால் மீண்டும் காலையில் விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர் .
இந்நிலையில் மறுநாள் காலை மகாராஜா போலீஸ் விசாரணைக்கு வராமல் வழக்கம் போல வேலைக்கு சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதன் காரணமாக, மாராஜாவை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தியதில் அவர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மகாராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்