
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. வெளிநாட்டில் இருந்த விஜயகுமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
வேலைக்கு சென்று மகாலட்சுமி வீட்டிற்கு தாமதமாக வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மகாலட்சுமி அடிக்கடி செல்போனில் அழைப்புகள் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விஜயகுமார் தனது மனைவியை வேலையை விடும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி மறுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசு மாவட்ட தலைமை மருத்துமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் போய் விஜயகுமார் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.
இரவு நேரங்களில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியரான மேற்பார்வையாளர் சுப்புராஜ் தனது மனைவிக்கு அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்வதாகவும், மேலும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகவும், இந்த வேலையினால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு குடும்பம் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்கானிப்பாளரிடம் முறையிட்டுள்ளார்.
இது உங்கள் குடும்ப பிரச்சினை, மேலும் அவர்கள் ஒப்பந்த பணியாளர் என்பதால் எனக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்காணிப்பாளர் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று விஜயகுமார், சுப்புராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அலட்சியம் காட்டிய மருத்துவமனை நிர்வாகத்தினை கண்டித்தும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அறையுள்ள கட்டிடம் முன்பு உடலில் டீசலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் மருத்துமனை நிர்வாகத்தினை கண்டித்தும், சுப்புராஜ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயகுமாரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சுப்புராஜ் மீது விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.விஜயகுமார் தன்னை அசிங்கப்படுத்தி பேசியதாக சுப்புராஜ் புகார் அளித்துள்ளார். இரு புகாரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்