"ஆசையா வளர்த்த அப்பாவுக்கே இப்படியா" - கண்ணை மறைத்த குடி போதை.. சரமாரியாக குத்திய மகன்

தந்தையிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்த நிலையில் வீட்டிற்கு
jemes and raj
jemes and raj
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி, பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் இவருக்கு வயது 56,மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம் மேற்கில் தனது மனைவியுடன் குடியிருந்த வந்திருக்கிறார்.

ராஜ்க்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர், இரண்டு மகன்களுக்கும் திருமணமான, நிலையில் இதில் இரண்டாவது மகன் ஜேம்ஸ் (33) தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவில் தனது மனைவியுடன் குடியிருந்து வருகிறார். இவர்களுடேனே அவரது பெற்றோர்களும்,இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஜேம்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு அவருடைய தந்தை ராஜ் மற்றும் தாயிடம் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது,இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் 1ம் கேட் பகுதியில் தனியாக குடியிருந்து வந்துள்ளனர்.அங்கும் சென்றும் அவரது மகன் ஜேம்ஸ் தொடர்ந்து பிரச்சனை செய்ததால் அங்கிருந்தும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இடம் மாறி மகிழ்ச்சிபுரம் வந்துள்ளனர்.

மீண்டும் ஜேம்ஸ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சிபுரம் சென்று தனது மனைவியிடம் தவறான எண்ணத்துடன் பேசினாயா என தந்தையிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்த நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு வீட்டிலிருந்து, வெளியே செல்ல இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தந்தை, ராஜை தெருவில் வழிமறித்து தகராறு செய்துள்ளார், அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென்று சரமாரியாக குத்தியா ஜேம்ஸ் தந்தையை, கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனைக் பார்த்த, அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீனவர் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட ஜேம்ஸை, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் தந்தையை, மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com