"மகனின் கண்முன்னே மாறி மாறி சீரழிக்கப்பட்ட தாய்!" துப்பாக்கிமுனையில் பழங்குடியின பெண்ணுக்கு நடந்த வன்புணர்வு சம்பவம்

குழந்தையின் கண் முன்னே துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Ujjain gang rape case
Ujjain gang rape caseUjjain gang rape case
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில், ஜூன் 18 ஆம் தேதி இரவு சமயத்தில் 30 வயதான பழங்குடியினப் பெண் ஒருவர் தனது 12 வயது மகனின் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் முதலில் திருடும் நோக்கத்தில்தான் அந்த இடத்திற்குள் நுழைந்துள்ளனர். ஆனால் பின்னர் அக்குற்றத்தை பாலியல் தாக்குதலாக மாற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, உஜ்ஜைனின் பட்நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணைக்கு நள்ளிரவு சமயத்தில் ஐந்து பேர் அப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அப்பெண்ணும், அவரது கணவரும், அவர்களது சிறு மகனும் அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குடும்பத்தினர் பண்ணையில் காவலர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை எழுப்பி, கணவரை வெளியே இழுத்துச் சென்று, துப்பாக்கி முனையில் வைத்து அவரைத் தாக்கியுள்ளனர். குற்றவாளிகளில் சிலர் அருகிலிருந்த காற்றாலையிலிருந்து கம்பிகளைத் திருட, மற்றவர்கள் தங்கள் கவனத்தை அப்பெண்ணின் பக்கம் திருப்பியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணையும் அவரது மகனையும் அருகிலுள்ள புதர் பக்கம் அழைத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவன், குழந்தையின் கண் முன்னே துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டு முதல் மூன்று குற்றவாளிகள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாகத் தாக்கியதாகவும், அச்சத்தில் உறைந்திருந்த சிறுவனைத் துப்பாக்கியால் மிரட்டி அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவமும் அப்பெண்ணையும் அவரது மகனையும் ஆழ்ந்த மன அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதன் பின்பு, பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத அந்த குற்றவாளி கும்பல் மீது பாலியல் வன்கொடுமைக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல் நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இரண்டு முதல் மூன்று ஆண்கள் மாறி மாறி ஈடுபட்ட ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை இது என்று பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது மகனும் குற்றம் சாட்டியுள்ளனர்.இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com