
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூர் நடுத்தெருவை சேர்ந்த 27 வயதுடைய தங்கவேல் சாமி. இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கஸ்தூரி தேவி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஓட்டுநர் வேலை செய்து வந்த தங்கவேல் வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி பார்வதிக்கும் தங்கவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
பார்வதி தனது கணவன் சுப்பையாவை பிரிந்து இரண்டு ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பார்வதிக்கும், தங்கவேல் சாமிக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. வேளைக்கு செல்வதாக சொல்லிவிட்டு தங்கவேல் பார்வதியுடன் சென்று வசித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தங்கவேலுவின் மனைவி அவரது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கஸ்தூரி தேவிக்கு பார்வதி பற்றி தெரிவந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த கஸ்தூரி கணவர் தங்கவேலுவை பிரிந்து அவரது சொந்த ஊரான அழகிய பாண்டியபுரத்தில் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தங்கவேலு திருநெல்வேலிக்கு சென்று பார்வதியுடன் ஒரே வீட்டில் தங்கி இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கஸ்தூரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலிக்கு சென்று பார்வதி மற்றும் தங்கவேலுவிடம் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கவேலு மற்றும் பார்வதி மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த பார்வதி மற்றும் தங்கவேலு காரில் தூத்துக்குடி வந்து பூச்சி மருந்தினை வாங்கி குடித்துள்ளனர். பின்னர் வாழ வேண்டும் என நினைத்த இருவரும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் முன்பு காரை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி வாயில் நுரை தள்ளியபடி “எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் விஷம் குடித்து விட்டோம்” என்று சொல்லியபடி காவல் நிலைய நுழைவாயிலுக்கு சென்றுள்ளனர். இவர்களைப் பார்த்த போலீசார் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.