

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளி ஒருவருக்கு உதவுவதாக கூறிய ஆண் செவிலியர் ஒருவர், அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சர்ரேயின் மெர்ஸ்தாம் பகுதியைச் சேர்ந்த எர்னஸ்ட் பால் குரூஸிடம், போர்ன்மவுத் கிரவுன் நீதிமன்றத்தில் அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, 30 வயதுகளில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட பாலியல் குற்றங்களுக்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 38 வயதான அவர் மீது பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு, ஒரு தடையுத்தரவு ஆகியவையும் பிறப்பிக்கப்பட்டு, அவர் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டோர்செட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது, "2023 ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் சிகிச்சைக்காக ராயல் போர்ன்மவுத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனைக்கு வந்ததும், அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட பிறகு வேறொரு அறைக்கு மாற்ற்றப்பட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அந்த பெண், செவிலியர் எர்னஸ்ட் குரூஸுடன் அறையில் தனியாகஇருந்துள்ளார். அவரது உடை மாற்ற வேண்டும் என்று கூறிய செவிலியர், அவரது ஆடைகளைக் கழற்ற உதவியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் அந்த ஆண் செவிலியர், அந்த பெண்ணை தவறான முறையில் தொடத் தொடங்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் காலையில் நடந்த அனைத்தையும் ஒரு பெண் செவிலியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்போம் என்றும், மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்