"தனது முன்னாள் காதலியோடு உடலுறவில் இருந்த ராணுவ வீரர்!" சுட்டுக்கொலை செய்த முன்னாள் காதலன் - பொறாமையால் அரங்கேறிய கொடூர கொலை

மேலும், ஸ்டீவர்ட் நிராயுதபாணியாக இருப்பதை அறிந்திருந்த லாண்ட்ரி, அவரை மார்பில் ஒருமுறை சுட்டார். இதனால் ஸ்டீவர்ட் உயிரிழந்துள்ளார்.
US Army soldier shooting case
US Army soldier shooting caseUS Army soldier shooting case
Published on
Updated on
1 min read

தனது முன்னாள் காதலியும், தன் குழந்தையின் தாயுமானவருடன் படுக்கையில் இருந்த ஒரு ராணுவ வீரரைக் கண்ட பிறகு, அவரைச் சுட்டுக் கொன்ற குற்றத்தை முன்னாள் அமெரிக்க ராணுவ தேசியக் காவல்படை வீரர் ஒருவர் ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியாவின் அகஸ்டாவில் உள்ள, ஃபோர்ட் கார்டன் என்ற இடத்தில், அமெரிக்க ராணுவ சார்ஜென்ட் ஆண்ட்ரே எஸ். ஸ்டீவர்ட் ஜூனியரைக் கொலை செய்த வழக்கில், 27 வயதான நட்ராவியன் ஆர். லேண்ட்ரி, இரண்டாம் நிலைக் கொலை மற்றும் வன்முறைக் குற்றம் மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மேலும், லாண்ட்ரிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2024 டிசம்பர் 14 ஆம் தேதி காலையில், இராணுவத் தளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.சம்பவம் நடந்த அன்று லாண்ட்ரி காலை பயிற்சிப் பணியில் இருந்ததாகவும், ஓய்வில் இருந்தபோது அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முன்னால் ஒரு கருப்பு டிரக் நிறுத்தப்பட்டிருந்ததை லாண்ட்ரி கவனித்து, அந்த வாகனம் யாருடையது? என்று கேட்டதாக ஒரு சாட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் வேறு ஒரு ஆண் இருப்பதாகச் சந்தேகித்த லாண்ட்ரி, அடுக்குமாடி குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மாடிக்குச் சென்று ஒரு படுக்கையறைக்குள் சென்றார். அந்த நேரத்தில் அப்பெண்ணுடன் உடலுறவில் இருந்த ஸ்டீவர்ட்டை அவர் கண்டதாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஸ்டீவர்ட் நிராயுதபாணியாக இருப்பதை அறிந்திருந்த லாண்ட்ரி, அவரை மார்பில் ஒருமுறை சுட்டார். இதனால் ஸ்டீவர்ட் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, லாண்ட்ரி தனது வசிப்பிடத்திலிருந்தும் இராணுவத் தளத்திலிருந்தும் தப்பி ஓடியுள்ளார். ஆனால் மெரிவெதர் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தால் இன்டர்ஸ்டேட் 85 நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்த பின்னர் துப்பாக்கியை ஜன்னலுக்கு வெளியே வீசியுள்ளார். ஆனால் அது பின்னர் காவல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி, துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது என்பதை சோதனையில் நிரூபிக்கப்பட்டது. ஸ்டீவர்ட் மீது லாண்ட்ரிக்கு பொறாமை இருந்ததாக அவரது முன்னாள் காதலி புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்காக லாண்ட்ரிக்கான தண்டனைத் தீர்ப்புத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com