“மாமனை துரத்தி துரத்தி வெட்டிய மச்சான்” - மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்ததால் ஆத்திரம்.. அக்காவிற்காக குற்றவாளியான தம்பி!

இவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் காரை இடைமறித்து காரில் இருந்து அவரை வெளியே இழுத்து வெட்ட...
“மாமனை துரத்தி துரத்தி வெட்டிய மச்சான்” - மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்ததால் ஆத்திரம்.. அக்காவிற்காக குற்றவாளியான தம்பி!
Published on
Updated on
2 min read

புதுச்சேரி, வில்லியனூர் ஜி. என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் . இவருக்கும் முத்தியால்பேட்டை, சோலைநகர் பகுதியை சேர்ந்த திலகா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற மகளும் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மனைவி மற்றும் குழந்தைகளை மணிகண்டன் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் சொகுசு காரில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நாவற்குளம் பகுதிக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது இவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் காரை இடைமறித்து காரில் இருந்து அவரை வெளியே இழுத்து வெட்ட முயற்சி செய்தனர்.

அப்போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்ற மணிகண்டனை துரத்திச் சென்று பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அள்ளித்தா நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டனை வெட்டியவர் மணிகண்டன் மனைவியின் தம்பியான 32 வயதுடைய ராஜி என்பது தெரியவருகிறது.

மேலும் மணிகண்டனை தாக்க அவரது நண்பர் உதவி செய்தனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் கோட்டகுப்பம் டிஎஸ்பி உமா தேவி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் திருமால் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் புதுவைப்பகுதியில் பதிங்கிருந்தராஜ்கமல் மற்றும் அவரது நண்பரான மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com