

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆராய்ச்சிபட்டி பகுதியில் உள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் 30 வயதுடைய மாரீஸ்வரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பிரியதர்ஷினி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கொல்லி தோழி செய்து வந்த மாரீஸ்வரன் மது பழக்கத்திற்கு அடிமையான தாகச் சொல்லப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் மாரீஸ்வரன் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் பிரியதர்ஷினியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மாரீஸ்வரன் அதே ஊரில் திருமணமான வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த பிரியதர்ஷினி மாரீஸ்வரனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அதனை தொடர்ந்து தன்னை அடித்து துன்புறுத்துவது பற்றி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் மாரீஸ்வரனை விசாரணைக்காக காவல்; நிலையத்திற்கு அழைத்திருக்கின்றனர். குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்த மாரீஸ்வரன் காவல் நிலையத்தின் பின்புறம் இருந்த போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். மேலும் கீழே இறங்க வேண்டும் என்றால் அதற்கு நிபந்தனைகளை வைத்திருக்கிறார்.
செல்போன் டவரில் அமர்ந்து கொண்ட மாரீஸ்வரன் “எனக்கு என் பொண்டாட்டி வேணா அந்த பொண்ணு தான் வேணும் நீங்க தான் அவளை கல்யாணம் பண்ணி வைக்கணும். எனக்கு வாரத்துக்கு ஒரு 30 ஆயிரம் கொடுத்து உதவி செய்யணும் அப்பதான் கீழ இறங்குவேன்” என கூறி போலீசாரை மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினரை வரவழைத்த போலீசார் சுமார் இரண்டு மணி நேரம் மாரீஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் அவர் மீது தற்கொலை முயற்சி பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் மதுபோதையில் கள்ளக்காதலியை திருமணம் செய்து வைக்க சொல்லி செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.