
சென்னை திருவொற்றியூர் ரேடியன்ஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் 28 வயதான ராஜா. இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ராஜா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு சில நண்பர்கள் கிடைத்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து ராஜா போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் ராஜாவிற்கு ஏற்பட்டுள்ளது, இதனால் ராஜாவிற்கு அவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த ராஜாவின் மனைவி அறையில் இருந்த கஞ்சாவினை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதை பற்றி ராஜாவிடம் கேட்டதற்கு அவர் “இது எனக்கு இல்லை என் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு விற்க போகிறேன்” என கூறியுள்ளார்.
இதனை கேட்டு கோபமடைந்த ராஜாவின் மனைவி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார், இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜா தனது மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற ராஜாவின் மனைவி தனது காயங்களுக்கு சிகிச்சை பார்த்து கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே ராஜா வேலைக்கு சென்றுள்ளார்.
எனவே வீட்டில் ராஜா இல்லாததை அறிந்த அவரது மனைவி காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது வீட்டில் இருக்கும் கஞ்சாவை பற்றியும் தனது கணவனை பற்றியும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜாவின் வீட்டில் இருந்த கஞ்சாவை கைப்பற்றி ராஜாவையும் கைது செய்துள்ளனர். மேலும் ராஜாவிடம் விசாரணை நடத்திய போலீசார்.
அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பட்டதாரி ஹரிஹரனை கைது செய்துள்ளனர். ராஜா ஹரிஹரனிடமிருந்து தான் கஞ்சாவை வாங்கியுள்ளார். அதே போல் ஹரிஹரனும் வேறு ஒரு நபரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து வேட்டையில் இறங்கிய போலீசார் இந்த கஞ்சா பறிமுதலில் தொடர்புடைய நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.