“கள்ள காதலால் கணவன் மீது கூலிப்படை ஏவிய மனைவி” - கடைக்கு செல்வதாக கூறி காதலனுடன் தலைமறைவு.. தாம்பரத்தில் நடந்த கொடூர தாக்குதல்!

ஆத்திரமடைந்த வசந்தா கணவர் தாமோதரனின் கால்களை அடித்து உடைக்க சொல்லி...
accusts and wife vasantha
accusts and wife vasantha
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த வேங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 42 வயதுடைய தாமோதரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய வசந்தா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 11 வயதில் கவியரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த நனவு வருடங்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக சொல்லிவிட்டு ஆட்டோவில் சென்ற வசந்தா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த தாமோதரன் பல்வேறு இடங்களில் வசந்தாவை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பின்னர் வசந்தா குறித்து விசாரித்து பார்த்ததில் அவர் அந்த ஆட்டோ ஓட்டுனருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததும் அதனால் கணவரை பிரிய நினைத்து கள்ளக்காதலனான ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்து கொண்டு வில்லியம் பாக்கம் அடுத்த ஒரத்தூரில் வசித்து வருவது தெரியவந்தது. நான்கு வயது மகனை ஐந்து கொண்டு தாயுடன் கஷ்டப்பட்ட தாமோதரன் பலமுறை வசந்தா வசிக்கும் வீட்டிற்கு சென்று மகனுக்காக தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைத்து வந்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநருடன் குடும்பம் நடத்தி வந்த வசந்தா கடந்த ஆண்டு கவியரசனை தன்னிடம் ஒப்படைக்குமாறு தாமோதரனிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த தாமோதரன் “என்னை ஏமாத்திட்டு துரோகம் செஞ்சிட்டு போன உங்கூட எல்லாம் என மகனை அனுப்பமாட்டேன்” என குறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக தாமோதரன் மற்றும் வசந்தாவிற்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த வசந்தா கணவர் தாமோதரனின் கால்களை அடித்து உடைக்க சொல்லி கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொன்மணி என்ற ரவுடியிடம் மூன்றரை லட்சம் கொடுத்திருக்கிறார். அதன்படி பொன்மணி சென்னையை சேர்ந்த பரத் (வயது-19) மற்றும் அகஸ்டின் (வயது-19) ஆகிய இருவரிடமும் 1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து தாமோதரனின் கால்களை உடைக்க கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து (ஏப் 4) ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் தாமோதரன் வீட்டுக்கு சென்று பார்சல் கொடுப்பது போல அவரை அழைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தாமோதரனை கீழே தள்ளிவிட்டு கையில் வைத்திருந்த இரும்பு பேஸ் பால் பேட்டை எடுத்து சரமாரியாக வலது காலில் தாக்கியதில் கால் முறிவு ஏற்பட்டது அதுமட்டுமின்றி உடம்பில் பல இடங்களில் ரத்தம் சொட்ட சொட்ட தாக்கியபோது தாமோதரனின் தாய் அடிக்க வேண்டாம் என கதறி உள்ளார். அப்போது வயதான மூதாட்டி என்று பாராமல் அவரை அந்த கூலிப்படை கும்பல் தள்ளிவிட்டு மீண்டும் தாமோதரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் வரத் தொடங்கியதும் இருவரும் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

தொடர்ந்து பொதுமக்கள் தாமோதனை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், அதன் பின்னர் இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,தகவலின் அடிப்படையில் மருத்துவமனை சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பார்சல் கொடுப்பதாக வந்து மர்ம நபர்கள் தாக்கி சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் வைத்து விசாரித்ததில் தாக்குதலில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த பரத் (வயது-19) மற்றும் அகஸ்டின் (வயது-19) என தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்றபோது இருவரும் தலைமறைவானதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும் தகவலறிந்து போலீசார் உடனடியாக சென்று அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com