“மூன்று வருடமாக கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி” - தினந்தோறும் அடித்து துன்புறுத்தி வந்த கணவன்… காதலனுடன் சேர்ந்து வாழ பெண் செய்த கொடூரம்!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 21 வயதுடைய கரண் தாஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது...
“மூன்று வருடமாக கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி” - தினந்தோறும் அடித்து துன்புறுத்தி வந்த கணவன்… காதலனுடன் சேர்ந்து வாழ பெண் செய்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதுடைய பார்த்திபன். இவர் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய அம்சவள்ளி என்ற பெண்ணை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டு பெற்றோரும் இவர்களை ஏற்றுக்கொள்ளாத நிலையில் கணவன் மனைவி இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, தேர்பேட்டை பச்சை குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் பார்த்திபன் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். மேலும் அம்சவள்ளி கட்டிட வேலைக்கு சென்று இருவரின் சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அம்சவள்ளிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் உடன் பணிபுரியும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 21 வயதுடைய கரண் தாஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அம்சவள்ளியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கரண் தாஸ் அடிக்கடி அம்சவள்ளியின் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதுபோல் இருவரும் தொடர்ந்து மூன்று வருடங்களாக திருமணத்திற்கு மீறிய தகாத உறவில் இருந்து வந்திருக்கின்றனர்.

Admin

மனைவியின் கள்ளக்காதலை அறிந்த பார்த்திபன் இது குறித்து அம்சவள்ளியிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் கூறாமல் பார்த்திபனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பார்த்திபன் குடி போதைக்கு அடிமையாகி அவ்வப்போது மனைவியிடம் கள்ளக்காதலை பற்றி கேட்டு அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அம்சவள்ளி பார்த்திபனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அதன் படி நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த பார்த்திபனை தனது சேலையில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் பார்த்திபனின் தம்பி உள்ளிட்டோர் தற்கொலை குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது. எனவே போலீசார் அம்சவள்ளியை கைது செய்ததுடன் அவரது கள்ளக்காதலன் கரண் தாஸ்ஸையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com