நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவர் சோலை பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய ஜஸ்டின் ராஜசேகர். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய இந்து சன்னி என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். அப்போது இந்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய லிண்டோ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது உள்ளது.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த உறவை சுதந்திரமாக தொடர நினைத்த இருவரும் ஜஸ்டின் ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவனை இந்து காதலன் லிண்டோ உதவியுடன் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து அன்று இரவே யாருக்கும் தெரியாமல் கணவனின் உடலை அருகில் உள்ள மத்திகிரி சுடுகாட்டு பகுதியில் புதைத்து விட்டு சாதாரணமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
நாளடைவில் வீட்டில் ஜஸ்டின் ராஜசேகர் இல்லாதததை கவனித்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து இந்துவிடம் விசாரித்துள்ளனர். அப்போது இந்து முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக சொல்லப்படுகிறது இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இந்துவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த தெரியவந்தது. எனவே இந்து கொடுத்த தகவலின் படி சுடுகாட்டில் இருந்த ஜஸ்டின் உடலை மீட்ட போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகால விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நீதிபதி சந்தோஷ் நேற்று (ஏப் 21) தீர்ப்பு வழங்கினார். இந்து மற்றும் லிண்டோவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கொடுத்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவி காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்