"10 முறைக்கு மேல்.. 14 வயது சிறுமியை சீரழித்த மருத்துவர்" - பணத்திற்கு பதிலாக பாலியல் பேரம்! மருந்து வாங்க பெண் செய்த கொடூர செயல்

குழந்தை அழுதது மட்டுமின்றி நடப்பதை நிறுத்த கூறும்போது எல்லாம் "மருத்துவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்" என்று கூறியுள்ளனர்.
Sexual Abuse Investigation
Sexual Abuse Investigation
Published on: 
Updated on: 
1 min read

டெக்சாஸைச் சேர்ந்த பெண் ஒருவர், மருத்துவர் தனக்கு பரிந்துரைத்த மருந்துகளுக்கு ஈடாக, ஒரு குழந்தையை அந்த மருத்துவரிடம் பாலியல் உறவு கொள்வதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதான அலிசியா எவோன் சான்செஸ், அமெரிக்காவில் உள்ள டைலரில், 56 வயதான கென்னத் ஹேகூட்டின் மருத்துவர் அலுவலகத்திற்கு பாலியல் துன்புறுத்தலுக்காக சிறுமியை அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதில், கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தைக்கு வெறும் 14 வயது என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மற்ற எந்த அடையாளங்களும் குறிப்பிடப்படவில்லை.

அலிசியா இவோன் செகுயின் என்றும் அறியப்படும் சான்செஸ், குழந்தையை ஹேகூடிடம் (மருத்துவர்) குறைந்தது 10 முறையாவது பாலியல் உறவிற்காக அழைத்துச் சென்றதாகவும், பாலியல் வன்கொடுமை நடக்கும்போது அங்கேயே தங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தை அழுதது மட்டுமின்றி நடப்பதை நிறுத்த கூறும்போது எல்லாம் "மருத்துவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்" என்று கூறியுள்ளனர்.

சில போதை தரும் மருந்துகளை மருத்துவர் சான்செஸுக்குக் கொடுத்ததாக அந்த குழந்தை ஒரு ஆலோசகரிடம் கூறியதை அடுத்து, காவல்துறையினர் தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 வயதுக்குட்பட்ட குழந்தையைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சான்செஸ் குற்றவாளி என விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு கிட்டத்தட்ட 99 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த செப்டம்பரில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஹேகூட் தற்போது எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஒரு குழந்தையைப் பாலியல் ரீதியாகத் தாக்கியது உட்பட, இரண்டு பெண் நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com