பணி நிரந்தரம் கேட்டு கேன்டீன் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்து பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் கேட்டு கேன்டீன் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை | முகுந்தராயபுரம் பகுதி அருகே செயல்பட்டு வரும் பாரத மிகுமின் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு ஒப்பந்த கேன்டீன் பணியாளர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினரை கண்டித்து இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரத மிகுமின் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த கேன்டீன் பணியாளராக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்த கேன்டீன் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

ஆனால்,தொழிற்சாலை நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த கேன்டீன் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக கால தாமதம் ஏற்படுத்தி மௌனம் காட்டி வருவதாக ஒப்பந்த ஊழியர்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த கேன்டீன் பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து இரண்டாவது நாளாக தொழிற்சாலை வளாகத்தின் முன்பு ஒன்றிணைந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்ப்பையும் மீறி அமைதி காத்து வரும் நிர்வாகத்தினருக்கு எதிராக நடந்த இந்த ஆர்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com