

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பகுதியில் உள்ள ஆதம்பாக்கம் கூத்தனூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ராமச்சந்திரன். சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த ராமசந்திரன் கூத்தனூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த நிலையில் சமீப காலமாக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வாலிபர்களிடம் நட்பாகவும் சகோதரத்துவத்துடனும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை தனது நண்பரான மணி என்பவருக்கு போன் செய்த ராமசந்திரன் “நான் கூடுவாஞ்சேரி டிராக் நிக்கிறேன் முடிஞ்சா காப்பாத்துங்கடா எனக்கு அந்த பொண்ணு வேணா… வாழ்க்கையே முடிஞ்சிருச்ச.. என் சாவை நேரடியா கேளுங்கடா” என கூறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது தற்கொலை காதல் தோல்வி தான் கரணம் என்பது தெரியவந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராமச்சத்திரன் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணும் இவரை காதலித்ததாக சொல்லப்படும் நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண் ராமச்சத்திரன் இடம் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த ராமசந்திரன் பலமுறை அந்த பெண்ணிடம் பேச முயற்சித்தும் அவர் தொடர்ந்து பேச மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் அவரிடம் பேச முயற்சித்த போது அந்த பெண் பேச மறுப்பு தெரிவித்த நிலையில் ராமசந்திரன் விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இருப்பினும் போலீசார் தொடர்ந்து தற்கொலைக்கான முழு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.