
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முகாசி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதாகும் கூலி தொழிலாளி பழனிசாமி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள பழனிச்சாமியின் மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இவரது மூத்த மகனான 22 வயதாகும் கோகுல் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் B.COM பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல் உயிர்நாடி வீக்கத்தால் பதிப்படைந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அந்த வலி குறையாமல் இருந்துள்ளது. வலியால் தனது அன்றாட வேலைகளை கூட செய்யாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் கோகுல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது போனில் வீடியோ எடுத்து வைத்த கோகுல், நேற்று காலை வயல்வெளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற கோகுல் தங்களது புதிய வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் தனது தாய் மற்றும் தம்பிக்கு அனுப்பி வைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் என்று அம்மா உன்னிடம் அடிக்கடி சொல்வேனே அந்த ஊருக்கு இப்பொழுது நான் போகிறேன், அதனால நீங்க வருத்தப்படாதீங்க சந்தோஷமா இருங்க, தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அக்காவை திருமணம் செய்து கொடுங்கள் அல்லது ஏற்கனவே திருமணமான மாமாவுடன் வாழட்டும் எனக்கு வேற வழி தெரியவில்லை, எனக்கு வலி அதிகமாக இருக்கிறது. மற்றபடி எனக்கு எதுவும் இல்லை எனக்கு எது நடந்தாலும் அதற்கு முழு காரணம் நான் தான்
தம்பி நீ அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக்கொள் அப்பா அம்மா சொல்வதை கேள் என்னால் தான் அப்பா அம்மாவை நினைத்தது போல் வைத்துக் கொள்ள முடியவில்லை, நீயாவது நன்கு அப்பா அம்மாவை வைத்துக்கொள் தேவையில்லாமல் ஊர் சுற்றாதே படித்து நல்ல வேலைக்கு செல் கடினமான வேலைக்கு செல்லாதே பத்திரமாக இரு” என கூறியுள்ளார் கல்லூரி படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.