
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான சான் ரேச்சல் என்ற சங்கர பிரியா. மாடலிங் செய்து வந்த இவர் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, Queen of madras 2022, 2023 MISS AFRICA GOLDEN INDIA போட்டியில் இரண்டாவது இடம் என பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு புதுச்சேரி 100 அடி சாலையில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
மேலும் மாடலிங் துறைக்கு வருபவர்களுக்கும் ரேச்சல் பயிற்சி அளித்து வந்துள்ளார், பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகளை ரேச்சல் கடன் வாங்கி நடத்தியுள்ளார். அதில் நினைத்து அளவில் லாபம் கிடைக்காமல் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். இதை தனது கணவரிடம் கூட தெரிவிக்காமல் ரேச்சல் மன உளச்சலில் இருந்துள்ளார். எனவே கடந்த (ஜூலை 06) தேதி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
தந்தை வீட்டிற்கு சென்ற ரேச்சல் அங்கு தந்தை பயன்படுத்த வைத்திருந்த தூக்க மாத்திரைகள் மற்றும் ரத்த கொதிப்பு மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த ரேச்சலின் தம்பி கெளதம் மற்றும் அவரது தந்தை காந்தி ரேச்சலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேச்சல் சிகிச்சை பெறுவதில் விருப்பம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாத்திரைகள் உட்கொண்டதால் ரேச்சலின் காய் மற்றும் கால்கள் வீக்கம் அடைந்துள்ளது இதை கவனித்த அவரது கணவர் சத்யா ரேச்சலை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேச்சல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காந்தி தனது மகளின் உயிரிழப்பை பற்றி போலீசில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற் கட்ட விசாரணையில் அவர் எழுதிவைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர், அதில் “தனது தற்கொலைக்கும் தனது கணவர் மற்றும் அவரது வீட்டாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என குறிப்பிட்டுருந்தது தெரியவந்துள்ளது. பல விருதுகளை பெற்ற கருப்பு அழகி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் மற்றும் மாடலிங் துறையினர் இடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.