நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். இதில் பெருமளவு இளைஞர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு முழுமூச்சோடு செயற்பட்டு வருகின்றனர். மேலும் தவெக -விற்கு ஆதரவாக இணையதளம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெக ஐடி கூட்டம் நடந்தது. இதில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்குபெற்றனர். ஜன நாயகன் படப்பிடிப்பில் இருந்ததால் விஜய் வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியிருந்தார் “அதில் தவெகவிற்கு ஆதரவாக பதவிடுவோரை வாழ்த்து தெரிவித்து “இனி நீங்கள் ரசிகர்கள் அல்ல விர்ச்சுவல் வாரியர்” என்று கூறியிருப்பார்.
இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்ஸர் விஷ்ணு தவெக -விற்கு ஆதரவாக தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். விஜய் சொல்கிறபடி பார்த்தால் இவரும் ஒரு விர்ச்சுவல் வாரியர் தான்.
இந்த விர்ச்சுவல் வாரியர் செய்த வேலைதான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. விஷ்ணுவும் இவர் மனைவி பியூட்டிசன் அமிஸ்தாவும் பிரபல யூடியூபர்கள், இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அமிஸ்தா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் தனது நண்பரின் தங்கைக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, “என்னால் உன்னை தங்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவரிடம் ஆபாசமாக பேசி தவறாக உறவுகொள்ள முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன அப்பெண், இதுகுறித்து தனது அண்ணனிடம் முறையிட்டுள்ளார், அந்த பெண்ணின் அண்ணன் மற்றும் நண்பர்கள் ‘ஸ்ரீராமிடம் தன் தங்கையை போலவே பேசி’ ஸ்ரீராமை வீட்டிற்கு வரவழைத்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவரை மன்னிப்பு கேட்க வைத்து அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “பெண்கள் உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசும் தவெக -ன் விர்ச்சுவல் வாரியர் இத்தகு தகாத செயலில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்