
நாளுக்கு நாள் நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, அறிவியல் வளர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் சிலர் பெண்கள் எதிரான வன்முறைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அவ்வாறாக சமீப காலமாகவே பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இது போல இணையத்தில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை நீக்க கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகினர். அவர் “ஏற்கனவே இணையத்தில் பரவி வந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள் தற்போது மேலும் 13 மேற்பட்ட இணையதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.
எனவே இதனை உடனே தடுக்கும் வகையில், சிந்தூர் தாக்குதலின் போது 400 சட்ட விரோதமான இணையதளங்களை தடை செய்தது போல இந்த இணையதளங்களையும் தடை செய்ய வேண்டும்”. என தெரிவித்தார் மேலும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, இது போன்ற சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்ற எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி “பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் அவர்களுக்கே தெரியாமல் இதுபோன்ற சட்ட விரோதமான இணையதளங்களில் பகிரப்படுவது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது, சிந்தூர் தாக்குதலின் போது சட்ட விரோதமான இணையதளங்கள்
முடக்கப்பட்டது போல அரசு இவ்வாறான இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இராமாயணத்தில் இராவணன் தலை வெட்ட வெடித்த முளைப்பது போல இது போன்று பல இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதை நம்மால் தடுக்க இயலாது”. என தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு இது போன்ற குற்றங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வர அணுகக்கூடிய எளிய வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.