
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள தட்டரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 30 வயதான தமிழ்செல்வி. இவர் கணவனை இழந்து 3 பெண் பிள்ளைகள் மற்றும் 6 வயதில் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் நான்கு நான்கு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இதே போல் முனியம்மாள் என்ற பெண்ணும் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரும் தட்ரஅள்ளி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, பாட்டை புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்த நிலையில் இதற்கு இன்னும் பட்டா வழங்க படவில்லை, ஆனால் இதே போல் அந்த பகுதியில் இருந்த மற்ற ஐந்து குடிசைகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தட்டரஹள்ளி பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் என்பவர் இந்த 2 பெண்களை நாகராஜன் வீட்டு வேலைக்கு அழைத்துள்ளார். மேலும் தன் வீட்டு கழிவறை சுத்தம் செய்ய வேலைக்கு வர சொல்லியும் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சொல்லப்படுகிறது. இதற்கு பெண்கள் மறுப்பு தெரிவிக்கவே அவர்களின் வீடுகளுக்கு பட்டா வழங்குவதை தொடர்ந்து தடை செய்து, வீட்டிற்கு நேரில் வந்தும் ஆட்களை வீட்டுக்கு அனுப்பியும் மிரட்டி வருவதாக தெரிவிக்கின்றனர். நாகராஜ் “நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளிடம் கூறுவேன் இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு உங்களை காலி செய்து விடுவேன்” என்று மிரட்டுவதாக அப்பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண்கள் “நாங்கள் வீட்டில் ஆண் துணை இன்றி வாழ்ந்து வருகிறோம், எங்களை எங்கள் சாதி பெயரை சொல்லி நாகராஜ் கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார் மறுத்ததனால் இவ்வாறு பிரச்சனை செய்து வருகிறார். நாகராஜ் அனுப்பிய ஆட்கள் வந்து என்னிடம் ‘நாங்கள் சொல்வது சரி என்று சொன்னால் இதே இடத்தில் பில்டிங் கட்டி தர சொல்றோம் இல்லனா இந்த வீட்டையே காலி பண்ணிடுவோம்’ என மிரட்டுகின்றனர். வீட்டிற்குள் பாட்டில்களை தூக்கி போட்டு கல் போட்டும் தாக்குகின்றனர். எனவே எங்களுக்கு இந்த இடத்திற்கான உரிய பட்டா கொடுத்து நாகராஜ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் நாங்கள் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் வைத்துக் கொண்டு இரவில் தூக்கம் இல்லாமல் உள்ளோம். எந்த நேரத்தில் யார் வருவார்கள் என்று இரவு முழுவதும் கையில் மிளகாய் பொடி கத்தியுடன் தினமும் இரவு நேரங்களில் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். என்று அந்த பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வருவாய்த்துறையினர் திடீரென வந்து, வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.