“எலும்பு கூடாக மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி” - ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போனவர் நடு காட்டில் உயிரிழப்பு.. விலகாத மர்மம்!

எனவே அவரது உறவினர்களை மற்றும் குடும்பத்தினர் அக்கபக்கத்தினர் உதவியுடன் நாள் முழுக்க தேடி...
“எலும்பு கூடாக மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி” - ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போனவர் நடு காட்டில் உயிரிழப்பு.. விலகாத மர்மம்!
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சிக்குட்பட்ட கல்லுரல் காடு வனப்பகுதியில் மண்டை ஓடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடு சிதறி கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பூலாம்பட்டி போலீசார் எலும்பு கூடுகளை கைப்பற்றி இறந்து கிடப்பவர் யார்? எப்படி உயிரிழந்தார் என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடப்பது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் செலவடை பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான 55 வயதுடைய சின்னக்கவுண்டர். என்பதும் இவர் கடந்த (செப் 29) ஆம் தேதி காலை வெளியில் சென்று வருகிறேன் என சொல்லிவிட்டு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரமால் இருந்திருக்கிறார். எனவே அவரது உறவினர்களை மற்றும் குடும்பத்தினர் அக்கபக்கத்தினர் உதவியுடன் நாள் முழுக்க தேடி பார்த்து கிடைக்காத நிலையில் சின்னக்கவுண்டர் காணாமல் போனதாக ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .

Admin

மேலும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் தொடர்ந்து தேடி வந்த நிலையிலும் சின்ன கவுண்டர் கிடைக்காததால் சந்தேகத்தின் பெரி காவல் துறையினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் காணாமல் போன அன்று சின்னக்கவுண்டர் அணிந்திருந்த கை வளையம் மற்றும் ப வேஷ்டியை வைத்து இறந்தது அவர் தான் என்பதை உருது செய்தனர் . பின்னர் எலும்பு கூடுவை மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாற்றுத்திறனாளி சின்னகவுண்டர் ஏதேனும் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்து இருப்பாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com