
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் DCE, DME, EEE, ECE, LOGISTICS TECHNOLOGY ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் வெங்கடேசன் இவர் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று கல்லூரிக்கு வந்த வெங்கடேசன் அவருடைய நண்பரின் தகப்பனார் ஒருவர் தயாரிக்கும் நாட்டு வெடிகுண்டை கல்லூரிக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த வெடிகுண்டை சக நண்பர்களிடம் காண்பித்த போது அதில் ஒரு மாணவன் நாட்டு வெடிகுண்டின் திரியை இழுத்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது
இதில் தூத்துக்குடி பி.என்.டி காலனி 11 வது தெருவை சேர்ந்த 15 வயது மாணவன் மாதவன் என்பவற்றின் கை எலும்பு பகுதி வெளியில் தெரியும்படி காயமாகி முற்றிலும் சிதைந்ததுள்ளது. அவரது அருகில் நின்று இருந்தால் முரளி கார்த்திக் என்ற மற்றொரு மாணவனின் கண்ணில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாணம் காவல்துறையினர் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டை மாணவன் வகுப்பறைக்கு கொண்டு வந்து வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பேட்டியளித்த கைசிதறிய மாணவனின் தாயார் “இங்கு சட்ட ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது மாணவர்கள் கல்லூரிக்கு என்ன கொண்டு வருகிறார்கள் என்பது கூட தெரியாமல் கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் மாணவர்களை பரிசோதனை செய்து தானே கல்லுரிக்குள் அனுப்ப வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாணவனின் தந்தை “ எனது மகனின் இந்த நிலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதை வேறு விதமாக தான் நாங்கள் எடுத்து செல்ல வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.